போட்டி 4 ; ஹர்டிக் பாண்டிய தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜென்ட்ஸ் அணியும் மோதின. இந்த போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. ஐபிஎல் 2022 போட்டிகளில் அறிமுகம் ஆன இரு அணிகளும் முதல் முதலில் விளையாடினார்கள்.
அதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர். லக்னோ அணிக்கு தொடக்க ஆட்டம் சரியாக அமையவில்லை. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்த நிலையில் 158 ரன்களை அடித்துள்ளனர். அதில் கே.எல்.ராகுல் 0, டி-காக் 7, லீவிஸ் 10, மனிஷ் பாண்டே 6, தீபக் ஹூடா 55, படோனி 54. குர்னல் பாண்டிய 21 ரன்களை அடித்துள்ளனர்.
பின்பு 159 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணிக்கு வெற்றி காத்திருந்தது. இறுதிவரை போராடிய குஜராத் அணி 19.4 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்த நிலையில் 161 ரன்களை அடித்த நிலையில் 5 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியுள்ளனர்.
போட்டி முடிந்த பிறகு பேசிய லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் கூறுகையில் ; “இந்த போட்டி மிகவும அருமையாக இருந்தது.பரவாயில்லை இந்த போட்டியின் போது மிடில் மற்றும் லோயர் ஆர்டரில் பேட்டிங் மிகவும் அருமையாக தான் இருந்தது. இந்த போட்டியில் எங்களுக்கு அதிக நம்பிகை எழுந்துள்ளது.”
“எதிர் அணியில் இருக்கும் பவுலர்கள் மிகவும் திறமையான வீரர்கள். எங்களுக்கு நன்கு தெரியும் குஜராத் அணியில் இருக்கும் ஷமி மிகவும் திறமையான பவுலர் தான் என்று. அவரது பங்காரமான பவுலிங் வீசியதால் தான் எங்கள் அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.”
“அதனால் அடுத்த போட்டியில் சிறப்பாக விளையாட நாங்கள் பவுலிங்கை இன்னும் நன்கு பயிற்சி செய்ய உள்ளோம். நாங்கள் என்ன நினைத்தோமோ அதனை சரியாக தான் செய்துள்ளோம். எங்கள் அணியின் (லக்னோ) குட்டி டிவில்லியர்ஸ் தான் படோனி. வரத்து முதல் போட்டியிலேயே அருமையாக விளையாடியுள்ளார் என்று கூறியுள்ளார் கே.எல்.ராகுல்.”
இப்பொழுது 5வது இடத்தில் உள்ளது லக்னோ சூப்பர் கெய்ன்ட்ஸ் அணி. பஞ்சாப் அணியில் இருந்து அவராகவே வெளியேறினார் கே.எல்.ராகுல். கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி எந்த அந்நிலையில் இருந்ததோ, அதேதான் லக்னோ அணிக்கும் என்று ரசிகர்கள் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.