நான் டாப் ஆர்டரில் பேட்டிங் செய்ததற்கு இதுதான் காரணம் ; ஹர்டிக் பாண்டிய கொடுத்த மாஸ் பேட்டி ;

0

நேற்று இரவு வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஹர்டிக் பாண்டிய தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியும் மோதின. இந்த இரு அணிகள் தான் இந்த ஆண்டு ஐபிஎல் டி-20 போட்டிகளில் அறிமுகம் செய்துள்ள புதிய அணியாகும்.

அதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய லக்னோ அணிக்கு தொடக்க ஆட்டம் சரியாக அமையவில்லை என்பது தான் உண்மை. முதல் நான்கு விக்கெட்டை தொடர்ந்து இழந்தது லக்னோ அணி. பின்னர் தீபக் ஹூடா, படோனி , குர்னல் பாண்டிய போன்ற வீரர்களை ரன்களை அடித்தனர்.

அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்த நிலையில் 158 ரன்களை அடித்தனர். பின்னர் 159 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது குஜராத் அணி. அதில் இறுதி வரை போராடிய குஜராத் அணி 19.4 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்த நிலையில் 161 ரன்களை அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது குஜராத் அணி.

போட்டி முடிந்த பிறகு பேசிய ஹர்டிக் பாண்டிய ; “எனக்கு தெரிந்து இந்த தருணம் தான் சரியான ஒன்றாக எனக்கு தெரிகிறது. இதில் நாங்கள் வெற்றி பெற்றாலும் தோல்வி பெற்றாலும் அதில் நாங்கள் என்ன கற்றுக்கொள்கிறோம் என்பதில் தான் இருக்கிறது. பவுலிங் செய்ய தொடங்கிய போது ஷமி அதனை சிறப்பாக தொடங்கி வைத்தார்.”

நான் எப்பொழுதும் இறுதியாக தான் பேட்டிங் செய்து வந்தேன். ஆனால் இந்த முறை நான் நான்காவது இடத்தில் பேட்டிங் செய்ததற்கு முக்கியமான காரணம் , குஜராத் அணி முதல் மூன்று விக்கெட் இழந்து விட்டது. அந்த நேரத்தில் மற்ற பேட்ஸ்மேன்கள் விளையாடினால் மன அழுத்தம் ஏற்படுவது வழக்கம்.”

“அதற்கு தான் நான் பேட்டிங் செய்ய போனேன். நான் அழுத்தத்தை எடுத்து கொண்டால் மற்ற வீர்ரகள் சரியாக விளையாட உதவியாக இருக்கும். எங்களை பொறுத்தவரை நாங்கள் எப்பொழுதும் ஒரு அணியாக தான் வெல்ல வேண்டும் என்று நினைத்து கொண்டு இருக்கிறோம்.”

” மனோகர் மற்றும் ராகுல் திவேதிய இருவரும் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்துள்ளனர். என்னுடைய விக்கெட்டை குர்னல் பாண்டிய விக்கெட்டை கைப்பற்றினார். நாங்கள் போட்டியில் வெற்றி பெற்றுவிட்டோம். அதனால் இப்பொழுது சமாதானமாக முடிந்தது என்று கேப்டன் ஹர்டிக் பாண்டிய கூறியுள்ளார்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here