தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகியதற்கு காரணம் இதுதான் ; உறுதியாக சொல்லும் பாகிஸ்தான் முன்னாள் வீரர் ;

0

ஐபிஎல் 2022 : கடந்த 26ஆம் தேதி தொடங்கியது 15வது சீசன் போட்டி. இதுவரை நான்கு போட்டிகள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. அதிலும் முதல் போட்டியில் ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.

அதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்த காரணத்தால் பேட்டிங் செய்ய களமிறங்கியது சென்னை அணி. அதில் சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 131 ரன்களை மட்டுமே அடித்தனர். பின்பு 132 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு வெற்றி கிடைத்தது.

18.3 ஓவர் வரை விளையாடிய கொல்கத்தா அணி 133 ரன்களை அடித்து 6 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது கொல்கத்தா. இதற்கிடையில் ஐபிஎல் முதல் போட்டி தொடங்கும் முன்பு சென்னை அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகி ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்தார் தோனி.

அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினார்கள். அதுமட்டுமின்றி, தோனி ஏன் இப்படி செய்தார் என்று பலர் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதேபோல பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான டேனிஷ் கனேரியா இதனை பற்றி கூறுகையில் :

“தோனி எப்படிப்பட்ட வீரர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அவர் எந்த முடிவு எடுத்தாலும் அது சரியாக தன இருக்கும். எனக்கு தெரிந்து தோனி தான் உலக கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த கேப்டன். தோனி தலைமையிலான இந்திய அணி மற்றும் சென்னை அணி பல முறை சாம்பியன் படத்தை கைப்பற்றியுள்ளது.”

“எனக்கு தெரிந்து தோனி இந்த நேரத்தில் ஜடேஜாவிடம் கேப்டன் பதவியை ஒப்படைத்தது, அதில் ஏதோ முக்கியமான காரணம் உள்ளது. ஆமாம், இந்திய அணியை அனைத்து விதமான போட்டிகளிலும் ஒரே கேப்டன் வழிநடத்துவது அவ்வளவு சுலபம் இல்லை. விராட்கோலி சிறந்த கேப்டன் தான், ஆனால் இப்பொழுது அனைத்து பொறுப்பில் இருந்தும் விலகியுள்ளார். “

உலக கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்கு தனி இடம் உண்டு. அதனால் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்த வேண்டுமென்று தான் அனைத்து கேப்டனும் நினைப்பார்கள். ஆனால் அதனை செய்ய வேண்டுமென்றால் அது சுலபம் கிடையாது. அனைத்து விதமான போட்டிகளிலும் ஒரே கேப்டன் வழிநடத்துவது அழுத்தத்தை ஏற்படுத்தும்.”

இன்னும் சில நாட்களில் நிச்சியமாக இந்திய அணியில் ஒருநாள் மற்றும் டி-20 போட்டிக்கு ஒரு கேப்டன் , டெஸ்ட் போட்டிகளுக்கு ஒரு கேப்டன் என்பதை விரைவாக அறிவிக்கும். அப்படி பார்த்தால் கேப்டனாக போவது யார் என்று பல கேள்விகள் எழுந்துள்ளன. ஆனால், தோனி இந்த நேரத்தில் கேப்டன் பதவியை ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்தது இந்திய அணியின் எதிர்காலத்தை நினைத்துதான் என்று கனேரியா கூறியுள்ளார்…!

இந்திய அணியை ரவீந்திர ஜடேஜா வழிநடத்தினால் சிறப்பாக இருக்குமா ?? இந்திய அணி எந்த அளவிற்கு போட்டிகளை எதிர்கொள்ளும் ? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here