இவரெல்லாம் எங்கள் அணியில் இருப்பது மிகவும் சந்தோஷமாக உள்ளது ; சஞ்சு சாம்சன் ஓபன் டாக் ;

நேற்று நடந்த 30வது போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் , சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி வழக்கம் போலவே பவுலிங் செய்ய முடிவு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். பின்னர் விளையாடிய வீரர்கள் அவரவர் கடமைக்கு அதிரடியாக விளையாடினார்கள். அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்த நிலையில் 217 ரன்களை அடித்துள்ளது ராஜஸ்தான்.

அதில் ஜோஸ் பட்லர் 103, படிக்கல் 24, சாம்சன் 38, ஹெட்மயேர் 26 ரன்களை அடித்துள்ளனர். பின்னர் 218 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது கொல்கத்தா அணி. ஆனால் வெறும் 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. தொடக்கத்தில் சிறப்பாக விளையாடியது கொல்கத்தா.

ஆனால் மிடில் ஆர்டரில் தொடர்ந்து விக்கெட்டை இழந்து வந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் சரியாக ரன்களை அடிக்க முடியாமல் போனது. இறுதிவரை போராடிய கொல்கத்தா அணி 19.4 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டை-யும் இழந்த நிலையில் 210 ரன்களை மட்டுமே அடித்துள்ளனர்.

அதில் பின்ச் 58, ஷ்ரேயாஸ் ஐயர் 85, நிதிஷ் ரானா 18 ரன்களை அடித்துள்ளனர். அதனால் 7 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. அதனால் புள்ளிபட்டியலில் ராஜஸ்தான் அணி 2வது இடத்திலையும், கொல்கத்தா அணி 6வது இடத்திலும் உள்ளனர்.

போட்டி முடிந்த பிறகு வெற்றியை குறித்து பேசிய ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறுகையில் ;” எனக்கு சிறது டென்ஷனாக தான் இருந்தது. ஆனால் திறமையான வீரர்கள் போட்டியை சிறப்பாக வழிநடத்த கொண்டு சென்றுள்ளனர். இன்றைய போட்டியில் வெற்றி பெற்றதற்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது.”

“சில விஷயங்களை சரியான நேரத்தில் செய்தால் தான் அதற்கான பலன் என்பது இருக்கும். அதே நேரத்தில் நான் கொல்கத்தா அணி வீரர்களை நான் மதிக்கிறேன். நாங்கள் போட்டியில் இருக்கிறோம் என்று சத்தியமாக நான் சிறிதளவு கூட யோசிக்கவில்லை. ஏனென்றால் கொல்கத்தா அணி சிறப்பாக பேட்டிங் செய்து கொண்டு வந்தனர்.”

“ஒவ்வொரு வீரரை பற்றி நான் பேசவிரும்பவில்லை. ஆனால் எங்கள் அணியில் மிகவும் சிறந்த வீரர்கள் உள்ளனர். அதிலும் ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற வீரர்கள் எங்கள் அணியில் இருப்பது மிகவும் மகிழ்ச்சியான ஒன்று. ஏனென்றால் ரசலுக்கு எதிராக வீசிய பவுலிங் மிகவும் அருமையாக இருந்தது.” என்று கூறியுள்ளார் சஞ்சு சாம்சன்.