இவருடைய பவுலிங் தான் எங்கள் அணிக்கு தோல்வியை கொடுத்தது ; ஷ்ரேயாஸ் ஐயர் ஓபன் டாக் ;

0

நேற்று இரவு 7:30 மணியளவில் மும்பையில் உள்ள ப்ராபோர்னே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.

இதுவரை இந்த இரு அணிகளும் 26 போட்டிகளில் நேருக்கு நேர் விளையாடியுள்ளது. அதில் கொல்கத்தா அணி 13 போட்டிகளிலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12 போட்டிகளிலும் வெற்றி பெற்ற நிலையில் ஒரு போட்டி முடிவில்லாமல் ட்ரா ஆனது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சிறப்பான தொடக்க ஆட்டம் உருவானது. அதிலும் ஜோஸ் பட்லரின் அதிரடியான ஆட்டத்தால் 20 ஓவர் முடிவில் 217 ரன்களை அடித்தது ராஜஸ்தான். அதில் ஜோஸ் பட்லர் 103, படிக்கல் 24, சாம்சன் 38, ஹெட்மயேர் 26, ரியன் பராக் 5 ரன்களை அடித்துள்ளனர்.

பின்பு 218 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனென்றால், இறுதி வரை போராடிய கொல்கத்தா அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை பெற்றுள்ளது. தொடக்க வீரரான பின்ச், ஷ்ரேயாஸ் ஐயர் போன்ற இருவரும் போட்டியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் இறுதியாக பார்ட்னெர்ஷிப் சரியாக அமையாத காரணத்தால் தோல்வியை சந்தித்தது கொல்கத்தா. அதில் பின்ச் 58, ஷ்ரேயாஸ் ஐயர் 85, நிதிஷ் ரானா 18, உமேஷ் யாதவ் 21 ரன்களை அடித்தனர். போட்டி முடிந்த பிறகு பேசிய ஷ்ரேயாஸ் ஐயர் கூறுகையில் ;

“எனக்கு தெரிந்து நங்க சிறப்பாக தான் விளையாட தொடங்கினோம். அதுமட்டுமின்றி, ரன் -ரேட் எவ்வளவு தேவையோ அதற்கு ஏற்ப தான் விளையாடி கொண்டு வந்தோம். ஆரோன் பின்ச் மிகவும் அருமையாக பேட்டிங் செய்தார். அவர் விளையாடும் வரை அனைத்தும் சரியாக தான் இருந்தது.”

“ஆனால் அவர் ஆட்டம் இழந்த பிறகு எங்களுக்கு சற்று பின்னடைவானது. நான் இருவரை பேட்டிங் செய்ய வேண்டும் என்று தான் நினைத்தேன். ஆனால் எப்பொழுது நிதிஷ் ரான சஹால் ஓவரில் ஆட்டம் இழந்தாரோ, அதில் இருந்து தொடர்ந்து விக்கெட்டை நாங்கள் இழந்தோம்.”

எதிர் அணியில் இருக்கும் ஜோஸ் பட்லர், மிகவும் சிறப்பாக தான் பேட்டிங் செய்தார். ஒருவேளை அவரை நாங்கள் விரைவாக விக்கெட்டை எடுத்திருந்தால் நிச்சியமாக ரன்களில் அதிக மாற்றத்தை பார்த்திருக்க முடியும். இந்த ப்ராபோர்னே மைதானம் எங்களுக்கு சரியாக இல்லை.”

“இருப்பினும் நாங்கள் செய்த தவறை சரி செய்து கொண்டு கம்பேக் கொடுப்போம் என்று கூறியுள்ளார் ஷ்ரேயாஸ் ஐயர்.” இதுவரை 7 போட்டிகளில் விளையாடிய அதில் மூன்று போட்டியில் மட்டும் வெற்றியை கைப்பற்றி புள்ளிபட்டியலில் 6வது இடத்தில் உள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here