பும்ரா இல்லை ; இந்திய அணியில் இவர் மிகவும் திறமை வாய்ந்த பந்து வீச்சாளர் ; ரோஹித் சர்மா புகழாரம் ;

இந்திய அணியில் இவரும் மிகவும் திறமையான பவுலர் என்று கூறியுள்ளார் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஓபன் டாக்.

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் விளையாடி வருகின்றன. இதுவரை மூன்று ஒருநாள் போட்டியில் 3 – 0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது. அதனை தொடர்ந்து இப்பொழுது டி20 போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இதுவரை நடந்த 2 போட்டிகளிலும் இந்திய அணி வென்றுள்ளது. அதனால் 2 – 0 என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி முன்னிலையில் இருப்பது மட்டுமின்றி தொடரையும் கைப்பற்றியுள்ளது இந்திய. இன்றைய போட்டியில் ஆறுதல் வெற்றியை கைப்பற்றுமா வெஸ்ட் இண்டீஸ் அணி என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்….!

இருப்பினும் நேற்று முன்தினம் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்த நிலையில் 186 ரன்களை அடித்தது இந்திய.

பின்னர் 187 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலகுடன் களமிறங்கியது வெஸ்ட் இண்டீஸ் அணி. ஆனால் தோல்வியை மட்டுமே மிஞ்சியது. ஆமாம்….! இறுதிவரை போராடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 178 ரன்களை மட்டுமே கைப்பற்றியது. அதனால் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது இந்திய அணி. இந்த போட்டியை பற்றி பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ;

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான வீரர்களுக்கு எதிராக விளையாடும் போது நிச்சியமாக அதில் சில கடினம் இருக்காதான் செய்யும். அதற்கு ஏற்ப நாங்களும் விளையாட வேண்டும். நாங்கள் என்ன நினைத்தமோ அதனை தான் செய்து வந்துள்ளோம். அதுமட்டுமின்றி இந்த முறை அனுபவம் தான் இந்திய அணியிம் வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது. ஆமாம்…! இந்திய கிரிக்கெட் அணியின் சூழ்நிலையை புரிந்து கொண்டு சிறப்பாக யாக்கர் பவுலிங் செய்துள்ளார் புவனேஷ்வர் குமார்.

புவனேஷ்வர் குமார் பவுலிங் மீது நாங்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளோம். தொடக்கத்தில் இரு விக்கெட்டை இழந்துவிட்டோம், ஆனால் அந்த சூழ்நிலையை புரிந்து கொண்ட விராட்கோலி சிறப்பாக விளையாடினார். அது மிகவும் முக்கியமான ஒன்று. அதேபோல இறுதிவரை ரிஷாப் பண்ட் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகிய இருவரும் சிறப்பாக விளையாடினார்கள்.

அதிலும் வெங்கடேஷ் ஐயர் விளையாடி விதம் எனக்கு மிகவும் பிடித்தது. அவரை போன்ற சில வீரர்கள் இந்திய அணியில் தேவை என்று கூறியுள்ளார் ரோஹித் சர்மா.