சிஎஸ்கே அணியில் ருதுராஜ்-க்கு பார்ட்னெர்ஷிப் செய்ய போகும் வீரர் இவர் தான் ; அப்போ சிறப்பான ஓப்பனிங் அமையுமா ?

0

ஐபிஎல் டி20 2022 போட்டிக்கான ஏலம் நடந்து முடிந்த நிலையில் இப்பொழுது ப்ளேயிங் பற்றிய பேச்சு தொடங்கியுள்ளது.

ஆமாம்…! அதிலும் குறிப்பாக சென்னை அணியை பற்றிய பேச்சு தான் சுடுப்பிடிக்க தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டு ஐபிஎல் டி20 2021யில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் சாம்பியன் பட்டத்தை வென்றது. அதற்கு முக்கியமான காரணமே தொடக்க வீரர்களான ருதுராஜ் மற்றும் டுபலஸிஸ் தான். ஆமாம்..! சிறப்பான தொடக்க ஆட்டத்தை அமைத்து பல போட்டிகளில் வெற்றிக்கு காரணமாக இருந்துள்ளனர்.

இருப்பினும் இந்த முறை மெகா ஏலம் நடைபெற உள்ளதால் அனைத்து அணிகளும் அதிகபட்சமாக தலா 4 வீரர்களை மட்டுமே தக்கவைத்துக்கொள்ள முடியும் என்று பிசிசிஐ கூறியது. அதில் ருதுராஜ், மகேந்திர சிங் தோனி, மொயின் அலி மற்றும் ரவீந்திர ஜடேஜா சென்னை அணியால் தக்கவைக்கப்பட்டனர். இருப்பினும் இதில் டுபலஸிஸ் இல்லாதது பலருக்கு அதிர்ச்சியாக அமைந்தது.

எப்படியாவது ஏலத்தில் டுபலஸிஸ் -ஐ கைப்பற்றும் என்று சிஎஸ்கே ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்தனர். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. ஆமாம்…! டுபலஸிஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இடம்பெற்றுள்ளார். ருதுராஜ் கெய்க்வாட்-வுடன் யார் களமிறங்க போகிறார் என்று பல எதிர்பார்ப்புகள் உள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நியூஸிலாந்து அணியின் வீரரான டேவன் கான்வே இடம்பெற்றுள்ளது சிறப்பாக ஒரு மாற்றமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆமாம்..! இப்பொழுது இருக்கும் வீரர்களில் இவரை விட்டால் சிஎஸ்கே அணியில் வேறு ஆல் இல்லை. அதனால் அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டேவன் ஆகிய இருவரும் தான் ஓப்பனிங் பார்ட்னெர்ஷிப் செய்ய போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய ருதுராஜ் 635 ரன்களை அடித்துள்ளார். அதுமட்டுமின்றி, இதுவரை நியூஸிலாந்து அணியின் வீரரான டேவன் ஐபிஎல் போட்டிகளில் விளையாடியதே இல்லை. அதனால் அவரது ஆட்டம் எப்படி இருக்கும் என்று பல எதிர்பார்ப்புகளுடன் காத்துகொண்டு இருக்கின்றனர். இதுவரை 14 சீசன் ஐபிஎல் டி20 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது.

அதில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்கு முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here