இந்திய அணியில் இவருக்கு நிரந்திரமான இடம் 100% உறுதி தான் ; பிசிசிஐ- எடுத்த சரியான முடிவு ;

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டிக்கான தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 141 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வென்றது.

அதனை அடுத்து கடந்த 20 ஆம் தேதி அன்று தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணி அதிரடியாக விளையாடி முதல் இன்னிங்ஸ் முடிவில் 438 ரன்களை அடித்தனர்.

அதில் விராட்கோலி 121, ரோஹித் சர்மா 80, ஜெய்ஸ்வால் 57, ரவீந்திர ஜடேஜா 61, அஸ்வின் 56 ரன்களை அடித்துள்ளனர். பின்பு முதல் இன்னிங்ஸ் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி வெறும் 255 ரன்களை மட்டுமே அடித்தனர். அதனால் இந்திய கிரிக்கெட் அணி 183 ரன்கள் முன்னிலையில் இருந்தனர்.

பின்பு இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி 181 ரன்கள் அடித்த நிலையில் டிக்கிளர் செய்தனர். அதனை தொடர்ந்து இப்பொழுது வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடி வருகின்றனர். இதில் 289 ரன்கள் அடிக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறது வெஸ்ட் இண்டீஸ் அணி.

பட்டைய கிளப்பி வரும் இந்திய :

எப்பொழுதும் மற்ற அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் , ஒருநாள் மற்றும் டி-20 போட்டிக்கான தொடரில் அட்டகாசமாக விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி ஐசிசி தொடருக்கான போட்டியில் மட்டும் சொதப்பி வருகின்றனர். ஆமாம், தொடர்ச்சியாக பல முறை ஐசிசி கோப்பையை வெல்ல முடியாத நிலையில் இருக்கிறது இந்திய.

பிசிசிஐ- செய்த தரமான பிளான் : இளம் வீரரின் வெற்றிகரமான விளையாட்டு :

கடந்த இரு ஆண்டுகளாக நடைபெற்ற உலகக்கோப்பை மற்றும் ஆசிய கோப்பைக்கான போட்டியில் இந்திய அணியால் கோப்பைகளை வெல்ல முடியவில்லை. அதனால் மூத்த வீரர்களுக்கு பதிலாக இளம் வீரர்களுக்கு அதிகமான வாய்ப்புகள் வழங்க வேண்டுமென்று பலர் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

அதேபோல ஐபிஎல் 2023 போட்டிகள் தொடரில் அருமையாக விளையாடிய ஜெய்ஸ்வால்-க்கு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதிலும் முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து சாதனை செய்துள்ளார் ஜெய்ஸ்வால். இதுவரை விளையாடிய இரு டெஸ்ட் போட்டிகளில் 171,57, 38 ரன்களை அடித்துள்ளனர்.

இதுபோன்ற இளம் வீரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமா ? இல்லையா ?