இந்த தவறை நான் செய்திருக்க கூடாதது தான்..! தவறு எங்கள் பக்கம் உள்ளது ; அதனை ஒப்புகொள்ளகிறேன் ; ரிஷாப் பண்ட் ஓபன் டாக்

நேற்று 7:30 மணியளவில் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரிஷாப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது.

அதனால் முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சிறப்பான தொடக்க ஆட்டம் அமைந்தது. அதிலும் தொடக்க வீரரான ஜோஸ் பட்லரின் அதிரடியான ஆட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 222 ரன்களை அடித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

அதில் ஜோஸ் பட்லர் 116, படிக்கல் 54, சஞ்சு சாம்சன் 46, ஹெட்மயேர் 1 ரன்களை அடித்துள்ளனர். பின்பு 223 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கியது டெல்லி கேபிட்டல்ஸ் அணி. தொடக்கத்தில் இருந்து சரியான பார்ட்னெர்ஷிப் அமையாமல் திணறிக்கொண்டு வந்தனர்.

அதிலும் ரிஷாப் பண்ட் அதிகபட்சமாக 44 ரன்களை மட்டுமே அடித்தனர். இறுதிவரை போராடிய டெல்லி கேபிட்டல்ஸ் அணி 20 ஓவர் வரை போராடி 8 விக்கெட்டை இழந்த நிலையில் 207 ரன்களை அடித்தனர். அதில் பிருத்வி ஷாவ் 37, டேவிட் வார்னர் 28, ரிஷாப் பண்ட் 44, லலித் யாதவ் 37, ஷர்டுல் தாகூர் 10 அடித்துள்ளனர்.

அதனால் 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. இதற்கிடையில் ரிஷாப் பண்ட் செய்த செயலால் முன்னாள் வீரர்கள் கடுப்பில் உள்ளனர். இறுதி ஓவரில் 36 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. அப்பொழுது ரோவ்மன் தொடர்ந்து மூன்று சிக்ஸர் அடித்தார்.

போட்டி முடிந்த பிறகு பேசிய ரிஷாப் பண்ட் கூறுகையில் ; “எனக்கு தெரிந்து அவர்கள் (ராஜஸ்தான்) அணி பவுலர்கள் சிறப்பாக பவுலிங் செய்தனர்.ஆனால் இறுதியாக எங்கள் பேட்ஸ்மேன் போவெல் சிறப்பாக பேட்டிங் செய்தார். அதுமட்டுமின்றி, அது NO BALL என்று நினைத்தேன்.”

“ஆனால் அவர்கள் NO ball கொடுக்கவில்லை, அது என்கையில் எதுவும் இல்லை. அது எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக தான் இருந்தது. எங்கள் அணியில் இருக்கும் அனைத்து வீரர்களும் கோவமாக மாறினார்கள். எனக்கு தெரிந்து இதனை நடுவர்களிடையே பேசி NO Ball கொடுக்க வேண்டும்.”

“ஆமாம், அம்ர் மைதனைத்துக்குள் வந்து நடுவரிடம் பேசியது தவறு தான், அனால் அந்த நேரத்தில் அந்த அளவிற்கு கோவமாக மாறியது தான் உண்மை. இது இரண்டு பக்கமும் தவறு உள்ளது., அதுமட்டுமின்றி இதில் நல்ல நடுவரும் உள்ளனர். இந்த போட்டி முடிந்தது முடிந்ததாக இருக்கட்டும்.”

இனிவரும் போட்டிகளுக்கு தயாராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ரிஷாப் பண்ட்.” டெல்லி கேபிட்டல்ஸ் அணி செய்தது சரியா தவறா என்பதை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பண்ணுங்க..!