பையனோட பேட்டிங் வேற லெவல் ! இந்திய கிரிக்கெட் அணிக்கு தேவையான ஒரே வீரர் இவர் தான் ; புகழ்ந்து பேசிய ஜடேஜா…!!

நேற்று நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இறுதி போட்டியில் விளையாடியது இந்திய. அதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணிக்கு தொடக்க ஆட்டம் பெரிய அளவில் அமையவில்லை. ருதுராஜ் ஆட்டம் இழந்த பிறகு குறைவான ரன்களை அடித்த நிலையில் இஷான் கிஷான், ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரோஹித் சர்மா போன்ற வீரர்கள் ஆட்டம் இழந்தனர். ஆனால் சூர்யகுமார் யாதவ் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகிய இருவரின் அதிரடியான ஆட்டத்தால் இந்திய அணிக்கு அதிக ரன்களை குவிந்தன.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 184 ரன்களை அடித்தது இந்திய . அதில் ருதுராஜ் 4, இஷான் கிஷான் 34, ஷ்ரேயாஸ் ஐயர் 25, ரோஹித் சர்மா 7, சூர்யகுமார் யாதவ் 65, வெங்கடேஷ் ஐயர் 35 ரன்களை அடித்தனர். பின்னர் 185 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது வெஸ்ட் இண்டீஸ் அணி.

தொடக்க வீரர்களான மாயேர்ஸ், சாய் ஹோப் இருவரும் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாமல் மிகவும் குறைவான ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தனர். ஆனால் பூரான் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவித்தார். இருந்தாலும் இறுதி வரை போராடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 167 ரன்களை மட்டுமே அடித்தனர்.

அதனால் வெஸ்ட் இண்டீஸ் அணியை 17 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றுள்ளது. இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான அஜய் ஜடேஜா, கூறுகையில் ; டி-20 போட்டிகளில் ஒரு சிலர் அவர்களுது பலத்தை பயன்படுத்தி பவுண்டரிகளை விட அதிக சிக்ஸர் அடிப்பார்கள்.

எனக்கு தெரிந்து இப்பொழுது இருக்கும் இந்திய கிரிக்கெட் அணியில் சிறப்பாக ஒரு வீரர் சூர்யகுமார் யாதவ் தான். அவரிடம் எந்த பலமும் இல்லை என்றாலும் அவரால் எப்படியாவது போட்டியின் நிலைமையை புரிந்து கொண்டு சிறப்பாக விளையாடுவது வழக்கம்.

அவர் அடித்த சிக்ஸர் சொல்லும் எப்படிப்பட்ட வீரர் என்று. அவரது முழு திறனையும் பயன்படுத்தி விளையாடியுள்ளார் என்று கூறியுள்ளார் அஜய் ஜடேஜா. சூர்யகுமார் யாதவ் கடந்த ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டி-20 போட்டியின் போது இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுகமாகியுள்ளார்.

சூர்யகுமார் அணியில் இடம்பெற்ற மிடில் ஆர்டர் சற்று வலுவாக இருப்பது போல தெரிகிறது. கிரிக்கெட் ரசிகர்கள் உங்கள் அன்பான கருத்தை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்…!