ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டு இருக்கின்றது. அதில் சூப்பர் 12 அணிகளுக்கு இடையேயான போட்டியில் அனைத்து அணிகளும் சிறப்பாக விளையாடி கொண்டு வருகின்றனர். நேற்று துபாய், ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், முகமது நபி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும், கெயில் கோட்ஸ்ர் தலைமையிலான ஸ்காட்லாந்து அணியும் மோதின.
அதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு பார்ட்னெர்ஷிப் சிறப்பாக அமைந்ததால் விறுவிறுப்பாக ரன்களை அடித்தனர். அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்த நிலையில் 190 ரன்களை கைப்பற்றினர்.
அதில் Zazai 44, ஷ்ஹசாட் 22, குர்பஸ் 46, நஜிபுல்லாஹ் 59, நபி 11 ரன்களை அடித்துள்ளனர். பின்பு 191 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கியது ஸ்காட்லாந்து அணிக்கு மிஞ்சியது தோல்வியே. ஏனென்றால் வெறும் 60 ரன்கள் எடுத்து 10 விக்கெட்டையும் இழந்து தோல்வியை சந்தித்தது.
அதில் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஜார்ஜ் முன்சே 25, கெயில் 10 ரன்கள் அடித்துள்ளனர். பின்பு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கலள் நான்கு பேர் தொடர்ந்து ஒரு ரன்கள் கூட அடிக்கலாம் விக்கெட்டை இழந்தனர். அதனால் இலக்கை அடிக்க முடியமால் திணறினர்.
ஸ்காட்லாந்து -யின் இந்த மோசமான நிலைக்கு ஆப்கானிஸ்தான் அணியின் சுழல் பந்து வீச்சாளர் முஜீப் உர் ரகுமான் 4 ஓவர் பந்து வீசி வெறும் 20 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். அதிலும் முதல் நான்கு விக்கெட்டைகளை கைப்பற்றி ஸ்காட்லாந்து அணியை ரன்கள் அடிக்க முடியாமல் திணறவைத்தார் முஜீப்.
ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றிக்கு முக்கியமான காரணம் முஜீப் தான் என்பதில் சந்தேகமில்லை. இதுவரை 1 போட்டிகளில் விளையாடிய அதில் வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் முதல் இடத்திலும், நெட் ரன் ரேட் +6.5 என்ற கணக்கில் வைத்துள்ளது ஆப்கானிஸ்தான்.