தோனி எனக்கு வாய்ப்பு கொடுத்திருந்தால் நிச்சியமாக என்வாழ்க்கையில் மாற்றம் நடந்திருக்கும் ; பவுலர் ஓபன் டாக் ;

இந்திய கிரிக்கெட் அணி :

அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் மிகவும் பிரபலமான விளையாட்டாக கிரிக்கெட் திகழ்கிறது. அதனால் 11 பேர் கொண்ட இந்திய அணியில் விளையாடுவது ஒன்றும் அவ்வளவு சுலபம் கிடையாது. பலருக்கு வாய்ப்பு கொடுத்ததும் அதனை சரியாக பயன்படுத்தாமல் இருக்கின்றனர்.

அதுமட்டுமின்றி, இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற வேண்டுமென்றால் முதலில் ரஞ்சி கோப்பை, சையத் முஸ்தாக் அலி கோப்பை போன்ற போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு வாய்ப்புகளை கொடுத்துள்ளனர். ஆனால் இப்பொழுது ஐபிஎல் டி-20 லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடினால் உடனடியாக இந்திய அணியில் இடம்பெறுவது சுலபமாக மாறியுள்ளது.

ஆனால் ப்ளேயிங் 11ல் இடம்பெறுவது அவ்வளவு சுலபம் இல்லை. ஏனென்றால் இப்பொழுது இந்திய கிரிக்கெட் அணியில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்புகளை கொடுத்து வருகிறது பிசிசிஐ. அதனால் கொடுக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தவில்லை என்றால் இந்திய அணியில் வெளியேற்ற படுவது வழக்கம் தான்.

அதிலும் ஒரு சிலர் வெறும் ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடி இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமலும் உள்ளனர். அதேபோல தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் விளையாடியுள்ளார் ஈஸ்வர் பாண்டே. அதுமட்டுமின்றி மத்திய பிரதேஷ் அணிக்காக 75 போட்டிகளில் விளையாடி 263 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார் ஈஸ்வர்.

நேற்று முன்தினம் அவர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். அப்பொழுது தோனியை பற்றி பேசிய கருத்து ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியள்ளது. ஆமாம், அதில் ” தோனி எனக்கு வாய்ப்பு கொடுத்திருந்தால் நிச்சியமாக என்னுடைய நிலைமை மாறியிருக்கும். நான் 23, 24வயதில் நான் பிட்னெஸ் ஆக தான் இருந்தேன்.”

“இந்திய அணியில் விளையாட தோனி எனக்கு வாய்ப்பு கொடுத்திருந்தால் நிச்சியமாக நான் சிறப்பாக விளையாடிருப்பேன். அதில் இருந்து என்னுடைய கேரியர் வேறுவிதமாக மாறியிருக்கும். இப்பொழுது நான் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன். நான் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை கடந்த 2007ஆம் ஆண்டு முதல் தொடங்கினேன், அதில் இருந்து நான் விளையாடும் ஒவ்வொரு போட்டிகளிலும் சந்தோசமாக தான் விளையாடினேன்.”

“அதுமட்டுமின்றி இந்திய அணியின் வீரர்களான விராட்கோலி, தோனி, யுவ்ராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, இஷாந்த் சர்மா, ரவீந்திர ஜடேஜா, புவனேஸ்வர் குமார் போன்ற வீரர்கள் மத்தியில் ட்ரெஸ்ஸிங் ரூமில் நான் இருந்தது பெருமையாக தான் இருக்கிறது. என்னை ஐபிஎல் டி-20 போட்டியில் அறிமுகம் செய்த ரைசிங் புனே அணிக்கு மிகவும் நன்றி.”

“நான் இரு ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடியுள்ளேன். அதுவும் ஒரு முறை விளையாடி சாம்பியன் லீக் கோப்பையை வென்றோம். அதில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அதுமட்டுமின்றி, தோனி மற்றும் ஸ்டீபன் பிளெம்மிங் கீழ் நான் விளையாடியது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது என்று கூறியுள்ளார் ஈஸ்வர் பாண்டே.”