இந்த பையன் மிடில் ஆர்டரில் இருக்கும் வரை எங்களுக்கு கவலையே கிடையாது ; பாபர் அசாம் ஓபன் டாக் ;

0

நேற்று சிட்னி மைத்தனத்தில் நடைபெற்ற முதல் செமி பைனல் போட்டி. அதில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து கிரிக்கெட் அணியும் மோதின.

போட்டியின் விவரம் :

டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங் செய்து முதலில் டார்கெட் வைக்க முடிவு செய்தனர். அதனால் முதலில் களமிறங்கியது நியூஸிலாந்து அணி. தொடக்கத்தில் இரு விக்கெட்டை விரைவாக பறிகொடுத்த நியூஸிலாந்து அணிக்கு சிறப்பான தொடக்க ஆட்டம் அமையவில்லை. இருந்தாலும் கேப்டன் கேன் மற்றும் டேரில் மிச்சேல் ஆகிய இருவரின் அதிரடியான ஆட்டத்தால் நியூஸிலாந்து அணிக்கு ரன்கள் குவிந்தன.

அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்த நியூஸிலாந்து அணி 152 ரன்களை அடித்தனர். அதில் பின் அலென் 4, கான்வெ 21, கேன் வில்லியம்சன் 46, கிளென் பிலிப்ஸ் 6, டேரில் மிச்சேல் 53*, நீசம் 16* ரன்களை அதிகபட்சமாக அடித்துள்ளனர். பின்பு 153 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது பாகிஸ்தான் அணி.

பாகிஸ்தான் அணிக்கு மட்டும் தொடக்க ஆட்டம் அமைந்தால் வெற்றி அவர்களுக்கு தான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஏனென்றால் பாபர் மற்றும் ரிஸ்வான் ஆகிய இருவரின் பார்ட்னெர்ஷிப் மிகவும் சிறப்பாக இருக்கும். அதேபோல சிறப்பாக விளையாடிய இருவரும் தலா அரைசதம் அடித்தனர். அதுமட்டுமின்றி, இளம் வீரரான முகமத் ஹரிஸ் சிறப்பாக விளையாடியதால் 19.1 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்த நிலையில் 153 ரன்களை அடித்த பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணியை வீழ்த்தியுள்ளனர்.

சற்று முன் : இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பட்டைய கிளப்ப போகும் இந்திய அணி இதுதான் ; இனிமேல் இவருக்கு வாய்ப்பு இருக்காது ; சோகத்தில் ரசிகர்கள் ;

அதில் முகமத் ரிஸ்வான் 57, பாபர் அசாம் 53, முகமத் ஹரிஸ் 30, ஷான் மசூத் 3 ரன்களை அதிகபட்சமாக அடித்துள்ளனர். போட்டியில் வென்ற பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இப்பொழுது இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளனர். போட்டி முடிந்த பிறகு பேசிய பாகிஸ்தான் கேப்டனான பாபர் அசாம் கூறுகையில் : “இந்த போட்டியை பார்க்க வந்துள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிக்க நன்றி. ஏனென்றால், இவர்களை பார்க்கும்போது நாங்கள் எங்களுது தாய்நாட்டில் விளையாடுவது போல தான் இருக்கிறது. பவுலிங் செய்யும்போது முதல் 6 ஓவர்கள் சிறப்பாக தான் பவுலிங் செய்தோம். அப்பொழுது போட்டி எங்கள் கையில் இருந்தது, ஆனால் பின்னர் அதிரடியாக விளையாட தொடங்கிவிட்டனர். இருந்தாலும் எங்கள் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக விளையாடினார்கள்.”

“அதிலும் குறிப்பாக மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்த இளம் வீரரான முகமத் ஹரிஸ் அவருடைய வெறித்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்த உலகக்கோப்பை போட்டியில் அவரது பங்களிப்பு மிகவும் உதவியாக இருக்கிறது. இன்றைய போட்டியில் வென்றது சந்தோசமாக தான் இருக்கிறது. இருந்தாலும் இறுதி போட்டியில் விளையாட தயாராக வேண்டும் என்று கூறியுள்ளார் பாபர் அசாம்.”

இன்று மதியம் நடைபெற உள்ள போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோத உள்ளனர். இதில் வெற்றி பெரும் அணிதான் இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ளும். அதனால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here