இந்த தவறு மட்டும் செய்யாமல் இருந்திருந்தால் நிச்சியமாக வெற்றிபெற்றிருக்க முடியும் ; கேன் வில்லியம்சன் வருத்தம் ;

0

ஆஸ்திரேலியா : டி-20 உலகக்கோப்பை போட்டிகள் கடந்த அக்டோபர் 16ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது. அதிலும் இன்னும் சில தினங்களில் இறுதி போட்டி நடைபெற உள்ளதால், யார் இந்த முறை உலகக்கோப்பையை வெல்ல போகிறார் என்ற ஆர்வம் கிரிக்கெட் ரசிகர்கள் இடையே எழுந்துள்ளது.

நியூஸிலாந்து மற்றும் பாகிஸ்தான் போட்டியின் விவரம் :

நேற்று சிட்னி மைதானத்தில் மதியம் 1:30 மணியளவில் தொடங்கிய போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய நியூஸிலாந்து அணிக்கு சரியான தொடக்க ஆட்டம் அமையவில்லை.

அதுமட்டுமின்றி முதல் 6 ஓவர் (பவர் ப்ளே) முழுவதும் பெரிய அளவில் ரன்களை அடிக்க முடியாமல் தவித்தது நியூஸிலாந்து அணி. ஆனால் மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடிய கேன் வில்லியம்சன் மற்றும் டேரில் மிச்சேல் விளையாடினார்கள். அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்த நிலையில் 152 ரன்களை அடித்தனர்.

சற்று முன் : இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பட்டைய கிளப்ப போகும் இந்திய அணி இதுதான் ; இனிமேல் இவருக்கு வாய்ப்பு இருக்காது ; சோகத்தில் ரசிகர்கள் ;

அதில் கேன் வில்லியம்சன் 46, டேரில் மிச்சேல் 53 ரன்களை அதிகபட்சமாக அடித்துள்ளனர். பின்பு 153 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது பாகிஸ்தான் அணி. வழக்கம் போல ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் ஆகிய இருவரும் சிறப்பான தொடக்க ஆட்டத்தை ஆரம்பித்தனர். இதற்கிடையில், முதல் ஓவரில் டிரென்ட் போல்ட் வீசிய பந்தை பாபர் அசாம் எதிர்கொண்டார். அப்பொழுது பாபர் அசாம் அடித்த பந்தை நியூஸிலாந்து வீரர் டேவன் கான்வே தவறவிட்டார். அதனால் போட்டி நியூஸிலாந்து அணிக்கு எதிராக மாறியது.

ஆமாம், 1 ரன்னில் ஆட்டம் இழக்க வேண்டிய பாபர் அசாம், இறுதியாக 53 ரன்களை விளாசியுள்ளார். அதனால் பாகிஸ்தான் அணிக்கு சாதகமாக மாறியது. ஒருவேளை கான்வே அந்த பந்தை பிடித்திருந்தால் நிச்சியமாக பாகிஸ்தான் அணிக்கு அழுத்தம் ஏற்பட்டிருக்கும். ஆனால் 19.1 ஓவர் வரை விளையாடிய பாகிஸ்தான் அணி 153 ரன்களை அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணியை வீழ்த்தியுள்ளனர்.

நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டி:

போட்டி முடிந்த பிறகு பேசிய கேன் வில்லியம்சன் ; ” முதலில் பாகிஸ்தான் அணிக்கு அழுத்தத்தை ஏற்படுத்தினோம். ஆனால் பாகிஸ்தான் வீரர்கள் சிறப்பாக பவுலிங் செய்தனர். 10 க்கு மேற்பட்ட ஓவர் நாங்க பேட்டிங் செய்த பிறகு தான் தோன்றியது, இந்த ரன்களை சுலபமாக அடித்துவிடாமல் என்று. நாங்க யாரும் கடினமாக விளையாடவில்லை என்பது ஏமாற்றமாக உள்ளது. அதிலும் பாபர் அசாம் மற்றும் ரிஸ்வான் ஆகிய இருவரும் எங்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தினார்கள். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இன்னும் சில இடங்களில் சரியாக விளையாட வேண்டும்.”

“பாகிஸ்தான் அணிக்கு தான் இந்த வெற்றி சேரும், அவர்கள் அனைவரும் சிறப்பாக விளையாடி உள்ளனர். இது போன்ற பல சிறந்த போட்டிகள் டி-20 போட்டிகளில் நடைபெறும் என்று கூறியுள்ளார் கேன்வில்லியம்சன்”.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here