இந்த பையன் சும்மாதான இருக்க ; வாய்ப்பு கொடுத்தால் பட்டைய கிளப்பிடுவார் ; சுப்மன் -க்கு சரியான மாற்று வீரர் ;

0

இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று டி-20 போட்டிக்கான தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த இரு போட்டிகளில் 1 – 1 என்ற கணக்கில் சம நிலையில் இருக்கின்றனர்.

இன்று இரவு ராஜ்கோட்-ல் உள்ள சவுராஷ்டிரா மைதானத்தில் மூன்றாவது டி-20 போட்டிகள் நடைபெற உள்ளது. அதனால் இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர். மூன்றாவது டி-20 போட்டியில் வென்று தொடரை கைப்பற்றுமா ? இந்திய கிரிக்கெட் அணி?

இரண்டாவது போட்டியில் தோல்விக்கு முக்கியமான காரணம் :

இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற இரண்டாவது டி-20 போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வென்றுள்ளது. அதற்கு முக்கியமான காரணம் இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டம் மோசமான நிலையில் இருந்தது தான்.

ஆமாம், இஷான் கிஷான் 2, சுப்மன் கில் 5, ராகுல் த்ரிபதி 5 ரன்களில் ஆட்டம் இழந்த காரணத்தால் இந்திய அணிக்கு பார்ட்னெர்ஷிப் அமையவில்லை. இருப்பினும் இறுதி ஓவர் வரை போராடிய நிலையில் தோல்வியை தான் கைப்பற்றியுள்ளது இந்திய.

இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் மாற்றம் நடக்குமா ?

இலங்கை அணிக்கு எதிரான முதல் இரு டி-20 போட்டிகளில் விளையாடிய தொடக்க வீரரான சுப்மன் கில் பெரிய அளவில் பேட்டிங் செய்யவில்லை. முதல் போட்டியில் 7 ரன்களையும், இரண்டாவது போட்டியில் 5 ரன்களை மட்டுமே அடித்திருக்கிறார்.

அதனால் அவருக்கு பதிலாக திறமையான ருதுராஜ் கெய்க்வாட் அணியில் இடம்பெற வேண்டும். அப்படி இடம்பெற்றால் இந்திய அணியின் தொடக்க ஆட்டம் மிகவும் சிறப்பாக இருக்கும் என்று ரசிகர்கள் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னணி வீரரான வாசிம் ஜாபர் கூறுகையில் : “எனக்கு தெரிந்து இறுதி டி-20 போட்டியில் ருதுராஜ் கெய்க் வாட் இடம்பெற வேண்டும். ஏனென்றால் இந்தியாவில் நடைபெற்ற உள்ளுர் போட்டிகளில் அதிக ரன்களை அடித்துள்ளார். குறிப்பாக விஜய் ஹசாரே கோப்பையில் சொல்ல வேண்டியதே இல்லை, அவ்வளவு அருமையாக விளையாடி வந்துள்ளார் ருதுராஜ். முதல் இரு போட்டிகளில் எதிர்பார்த்த அளவிற்கு சுப்மன் கில் விளையாடவில்லை.”

“பல போட்டிகளாகவே பெஞ்ச்-ல் நிதானமாக இருக்கும் ருதுராஜ் கெய்க்வாட் அணியில் இடம்பெற வேண்டும். அதேபோல அர்ஷதீப் சிங் இரண்டாவது டி-20 போட்டியில் மறக்க முடியாத மாதிரி சில செயல்கள் செய்தாலும், அவருக்கு ஆதரவாக இருக்க வேண்டும். அப்பொழுது தான் திறமையான வீரர்களை உருவாக்க முடியும் என்று கூறியுள்ளார் வாசிம் ஜாபர்.”

கிரிக்கெட் ரசிகர்களே, நீங்க சொல்லுங்க..! மூன்றாவது டி-20 போட்டிக்கான இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட் இடம்பெற வேண்டுமா ? இல்லையா ??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here