வீடியோ : எல்லாம் முடிஞ்சுது ; கேப்டனாக இருந்துட்டு இப்படியெல்லாம் செய்யலாமா பாண்டிய ?

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி-20 போட்டி இன்று இரவு 7 மணியளவில் ராஜ்கோட்-ல் உள்ள சவுராஷ்டிரா மைதானத்தில் நடைபெற உள்ளது.

இதில் இரு அணிகளும் 1 – 1 என்ற கணக்கில் சம நிலையில் இருக்கின்றனர். அதனால் இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர்.இன்றைய போட்டியில் இந்திய அணி வென்று டி-20 போட்டிக்கான தொடரை வெல்லுமா இந்திய ?

ஹர்டிக் பாண்டிய செய்த செயல் பேசும்பொருளாக மாறியுள்ளது :

நேற்று முன்தினம் இரவு புனேவில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் செய்ய களமிறங்கியது இந்திய. அதனால் வேறுவழியில்லாமல் பேட்டிங் செய்த இலங்கை அணிக்கு சிறப்பான தொடக்க ஆட்டம் அமைந்தது.

அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 206 ரன்களை குவித்தனர். பின்பு 207 ரன்கள் அடிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டது இந்திய கிரிக்கெட் அணி. ஆனால் பேட்டிங் இந்திய அணி சரியாக அமையாத காரணத்தால் தொடர்ந்து விக்கெட்டை இழந்தது இந்திய. 8 விக்கெட்டை இழந்த இந்திய கிரிக்கெட் அணியால் 190 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. அதனால் 16 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது இலங்கை கிரிக்கெட் அணி.

இதில் இறுதி ஓவரில் 21 ரன்கள் தேவை என்ற நிலையில் இருந்தது இந்திய கிரிக்கெட் அணி. அப்பொழுது வெறித்தனமாக விளையாடிய அக்சர் பட்டேல் நிச்சியமாக இந்திய அணியை வெற்றிபெற வைத்துவிடுவார் என்று தான் பலர் நினைத்து கொண்டு இருந்தனர்.

ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் இறுதி ஓவரில் 19.3 ஷனாக வீசிய பந்தில் விக்கெட்டை இழந்தார் அக்சர் பட்டேல். பின்பு மீதமுள்ள 3 பந்தில் 19 ரன்களை அடிப்பதற்கான வாய்ப்பு குறைவுகவே இருந்தது. பின்னர் 1 பந்தில் 17 ரன்கள் தேவை என்ற நிலையில் இந்திய அணியின் கேப்டனான ஹர்டிக் பாண்டிய, எதோ போட்டி முடிந்துவிட்டது போல அணியில் இருக்கும் சக வீரர்களுக்கு கை குடுக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது.

போட்டியே இன்னும் முடியவில்லை. அதற்குள் ஏன் ஹர்டிக் பாண்டிய இப்படி செய்கிறார் ? கேப்டனாக இருந்தால் நிதானமாக இருக்க வேண்டும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் அவரவர் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். உண்மையிலும் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு என்ன காரணமாக இருக்கும் ?