இவர் CSK அணியில் இருந்து வெளியேறினால் சென்னை அணிக்கு ஒரு பிரச்சனையும் இல்லை ; பிளெம்மிங் ஓபன் டாக் ;

0

ஐபிஎல் 2022:

இந்த ஆண்டு ஐபிஎல் 2022 போட்டிகள் கடந்த மார்ச் 26ஆம் தேதி முதல் தொடங்கியது. அதில் இருந்து இதுவரை கிட்டத்தட்ட 65 போட்டிகள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இன்னும் ஒரு வாரங்கள் மட்டுமே உள்ளது ப்ளே – ஆஃப் சுற்றுக்கு. அதனால் இந்த முறை யார் கோப்பையை வெல்ல போகிறார்கள் என்று எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் 2022:

கடந்த 2020ஆம் ஆண்டு எப்படி சென்னை அணிக்கு மிகவும் மோசமான ஆண்டாக இருந்ததோ, அதேபோல தான் இந்த ஆண்டும் உள்ளது. ஏனென்றால் இதுவரை 13 போட்டிகளில் விளையாடிய சென்னை வெறும் 4 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது. அதனால் புள்ளிபட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.

அதுமட்டுமின்றி, இந்த ஆண்டு ப்ளே – ஆஃப் சுற்றுக்கும் தகுதி பெறாமல் வெளியேறியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

அம்பதி ராயுடு-வின் தீடிர் முடிவு:

இரு தினங்களுக்கு முன்பு சென்னை அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ராயுடு, தீடிர் என்று அவரது ட்விட்டர் பக்கத்தில் இதுதான் என்னுடைய ஐபிஎல் போட்டியின் இறுதி ஆண்டு. இதுவரை ஆ ஆண்டுகள் சென்னை மற்றும் மும்பை போன்ற பெரிய அணிகளில் விளையாடியது மகிழ்ச்சி என்று பதிவு செய்திருந்தார்.

பின்னர் சென்னை அணியின் CEO காசி விஸ்வநாதன் இதனை பற்றி பேசியதில், ராயுடு இந்த ஆண்டு சரியாக விளையாட நிலையில் கோபமாக தான் அந்த முடிவை கையில் எடுத்துள்ளார். ஆனால் இப்பொழுது நாங்கள் அவரிடம் தெளிவாக பேசிவிட்டோம். அவர் நிச்சியமாக அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவார் என்று கூறினார்.

இதனை பற்றி பேசிய சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் பிளெம்மிங் கூறுகையில்:

அவர் (ராயுடு) அப்படி சொன்னது ஒன்றும் அதிர்ச்சியாக இல்லை. இருப்பினும் ஒரு டீ -கப்பில் கல்லை வீசியது போல தான் இருந்தது. இது போன்ற விஷயங்கள் நடப்பது சாதாரணம் தான். ஆனால் அவர் எடுத்த முடிவால் சென்னை அணியின் எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பது தான் உண்மை என்று கூறியுள்ளார் பிளெம்மிங்.

சென்னை ரசிகர்களே..! நீங்க சொல்லுங்க..! சென்னை அணியில் ராயுடு-வின் பங்களிப்பு எந்த அளவிற்கு முக்கியமான ஒன்று. அவர் அடுத்த ஆண்டு ஐபிஎல் டி-20 2022 போட்டிகளில் இருக்க வேண்டுமா ?? வேண்டாமா ?? உங்கள் கருத்துக்கள் இங்கு வரவேற்க படுகிறது. கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here