இவர் தோனியின் இடத்தை சரியாக பயன்படுத்தி வருகிறார் ; இந்திய அணியின் பினிஷர் இவர்தான் ; முன்னாள் வீரர் ஆதரவு ;

நேற்று நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், தெம்பா பவுமா தலைமையிலான சவுத் ஆப்பிரிக்கா அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 10 ஓவர் வரை சிறப்பான பார்ட்னெர்ஷிப் இருந்தது. ஆனால் அதனைப்பினார் ஷிகர் தவான் மற்றும் விராட்கோலி ஆகிய இருவரும் தொடர்ந்து விக்கெட்டை இழந்த காரணத்தால் இந்திய அணிக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இருந்தாலும் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 287 ரன்களை கைப்பற்றியது இந்திய. அதில் கே.எல்.ராகுல் 55, ஷிகர் தவான் 29, விராட்கோலி 0, ரிஷாப் பண்ட் 85, ஷ்ரேயாஸ் ஐயர் 11, வெங்கடேஷ் ஐயர் 22, ஷர்டுல் தாகூர் 40, ரவிச்சந்திரன் அஸ்வின் 25 ரன்களை அடித்துள்ளனர்.

பின்னர் பேட்டிங் செய்த தென்னாபிரிக்கா அணிக்கு 288 ரன்கள் அடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால் இந்திய அணியை போல இல்லாமல் தென்னாபிரிக்கா அணிக்கு சிறப்பான பார்ட்னெர்ஷிப் அமைந்தது தான் உண்மை. ஆமாம்..! அதனால் தான், தென்னாபிரிக்கா அணி வெற்றி பெற காரணமாக அமைந்துள்ளது.

48.1 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்த நிலையில் 288 ரன்களை அடித்து இந்திய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது தென்னாபிரிக்கா அணி. அதனால் 2 – 0 என்ற கணக்கில் தென்னாபிரிக்கா அணி முன்னிலையில் இருப்பதால் தொடரை கைப்பற்றியுள்ளது தென்னாபிரிக்கா அணி.

போட்டியை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான கவாஸ்கர் அளித்த பேட்டியில் ; ரிஷாப் பண்ட் சமீப காலமாக நான்காவது இடத்தில் பேட்டிங் செய்து வருகிறார், அதில் அவர் அதிரடியாகவும் ஆக்ரோஷமாகவும் விளையாடுவார்.

அதனால் அவரை நான்காவது இடத்திற்கு பதிலாக 6வது இடத்தில் பினிஷர் ஆக விளையாடினால், எந்தவிதமான பயமும் தயக்கமும் இல்லாமல் விளையாடினால் சிறப்பாக இருக்கும் என்று கூறியுள்ளார் கவாஸ்கர். முதல் ஒருநாள் போட்டியில் ரிஷாப் பண்ட் 16 ரன்களையும், இரண்டாவது ஒருநாள் போட்டியில் 85ரன்களை அடித்துள்ளார்.