ஐபிஎல் : எந்த எந்த வீரர்கள் லக்னோ மற்றும் அகமதாபாத் போன்ற கைப்பற்றியுள்ளார்கள் தெரியுமா ? அட இது நம்ம list-லையே இல்லையே ;

0

ஐபிஎல் 2022 போட்டிக்கான பேச்சு வார்த்தை போக போக சுடுபிடிக்க தொடங்கிவிட்டது தான் உண்மை.

ஐபிஎல் 2021 போட்டிகள் கடந்த செப்டம்பர் மாதம் தான் நடைபெற்று முடிந்துள்ளது. ஆனால் அதில் இருந்து தொடங்கியது ஐபிஎல் 2022 போட்டிக்கான பேச்சு. அதற்கு முக்கியமான காரணம் ஐபிஎல் 2022 போட்டிக்கான ஏலம் மிகப்பெரிய அளவில் நடைபெற உள்ளது. அதுதான் முக்கியமான காரணம்..!

அதுமட்டுமின்றி புதிய இரு அணிகள் (லக்னோ மற்றும் அகமதாபாத்) போன்ற இரு அணிகளை அறிவித்துள்ளது பிசிசிஐ. அதனால் ஐபிஎல் போட்டிகளில் இருக்கும் 8 அணிகளும் அதிகபட்சமாக தலா 4 வீரர்களை தக்கவைத்துகொள்ள முடியும் என்று கூறியது பிசிசிஐ. ஆனால் புதிய அணிகளுக்கு அப்படி இல்லை, லக்னோ மற்றும் அகமதாபாத் போன்ற இரு அணிகளும் ஒரு வெளிநாட்டு வீரர், இரு இந்திய வீரர் என்ற அடிப்படையில் கைப்பற்ற முடியும் என்று கூறியுள்ளார்.

அதன் லிஸ்ட் இப்பொழுது வெளியாகியுள்ளது. அது வைரலாக பரவி வருகிறது. லக்னோ அணியின் கேப்டனாக விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான கே.எல்.ராகுல் தான் அவரை தொடர்ந்து ஆஸ்திரேலியா அணியை சேர்ந்த மார்கஸ் ஸ்டோனிஸ் மற்றும் இந்திய வீரரான ரவி பிஷோனி. இதில் கே.எல்.ராகுல் மற்றும் ரவி பிஷோனி ஆகிய இருவரும் பஞ்சாப் கிங்ஸ் அணியில் விளையாடி வந்துள்ளனர். அதேபோல டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் விளையாடி வந்துள்ளார் மார்கஸ் ஸ்டோனிஸ்.

அகமதாபாத் அணியில் ; ஹார்டிக் பாண்டிய, ரஷீத் கான் மற்றும் சுமன் கில் அணியில் இடம்பெற்றுள்ளனர். இதில் அதிக மதிப்பில் இடம்பெற்றுள்ளார் ஹார்டிக் பாண்டிய மும்பை இந்தியன்ஸ் அணியில் முன்னணி வீரராக இடம்பெற்றுள்ளார். ஆனால் சமீபத்தில் நடந்த அறுவை சிகிச்சைக்கு பின்பு அவரால் சரியாக பேட்டிங் மற்றும் பவுலிங் செய்ய முடிவதில்லை .

ஆனால் இருந்தாலும் அவரை கேப்டனாக நியமனம் செய்துள்ளது அகமதாபாத் அணி. சன்ரைஸ்சர்ஸ் ஹைதராபாத் அணியில் இருந்த ரஷீத் கானை முதல் வீரராக தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்று அவரே நிபந்தனை வைத்தார். ஆனால் அதனை சன்ரைஸ்சர்ஸ் ஹைதெராபாத் அணி ஒப்புக்கொள்ளதா காரணத்தால் அணியில் இருந்து வெளியேற்றியுள்ளார் ரஷீத் கான்.

அதிரடி ஓப்பனிங் பேட்ஸ்மேனாக சுமன் கில் திகழ்த்துள்ளார். ஆனால் கொல்கத்தா அணி அவரை (சுமன் கில்) தக்கவைத்துக்கொள்ளவில்லை, அது கொல்கத்தா ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அகமதாபாத் அணி தான் சிறிது வலுவான அணியாக திகழ்கிறது.

ஐபிஎல் ரசிகர்களே நீங்க சொல்லுங்க… லக்னோ ஆ?? அகமதாபாத் ஆ?? இதில் எந்த அணி சிறந்த அணியாக தெரிகிறது…! உங்கள் கருத்துக்களை மறக்காமல் Comments பண்ணுங்க…!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here