இந்த பையன் நிச்சியமாக உலகக்கோப்பை போட்டியில் இருக்க வேண்டும் ; இந்திய அணிக்கு மிகவும் முக்கியம் இவர் ; முன்னாள் வீரர் உறுதி ;

இந்திய மற்றும் இலங்கை அணிக்கு எதிரான தொடர் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றனர். ஆமாம், இரு தினங்களுக்கு முன்பு தொடங்கிய முதல் டி-20 போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி முதல் போட்டியில் வெற்றி பெற்று 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இன்று இரவு இரண்டாவது டி-20 போட்டிகள் நடைபெற உள்ளது. அதில் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றிவிடும். ஆமாம்..! முதல் டி-20 போட்டியில் இளம் வீரரான இஷான் கிஷான் ரோஹித் ஷர்மாவுடன் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கி விளையாடி வருகிறார்.

89 ரன்களை அடித்து தொம்சம் செய்தார் இஷான் கிஷான், அதனால் தான் இந்திய அணியால் 199 ரன்களை அடிக்க முடிந்தது. இவருடைய அதிரடியான விளையாட்டை பார்த்து பல முன்னாள் வீரர்கள் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதேபோல தான் இந்திய அணியின் முன்னாள் வீரரான வாசிம் ஜாபர் கூறுகையில் ;

இஷான் கிஷானுக்கு அதிர்ஷ்டம் தான். ஏனென்றால் ருதுராஜ் கெய்க்வாட்-க்கு காயம் ஏற்பட்ட காரணத்தால் அவருக்கு பதிலாக தான் இஷான் கிஷான் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கி விளையாடி வருகிறார். அதுமட்டுமின்றி இலங்கை அணியின் பவுலிங் அவருக்கு உதவியாக மாறியுள்ளது தான் உண்மை.

இஷான் கிஷான் மொத்தம் 10 பவுண்டரி, மூன்று சிக்ஸர் ஆகியவற்றை அடித்துள்ளார். அது தான் இந்திய கிரிக்கெட் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற முக்கியமான காரணமாக இருந்துள்ளது. இஷான் கிஷான் சின்ன பையன் தான், ஆனால் இந்திய அணியில் அவர் இடம்பெற்றது மிகவும் மகழ்ச்சியான ஒன்று.

அதுமட்டுமின்றி, இந்திய கிரிக்கெட் அணி அவர் மேல் அதிக நம்பிக்கை வைத்துள்ளது என்பது தான் உண்மை. இஷான் கிஷான் டாப் ஆர்டரில் பேட்டிங் செய்தால் சிறப்பாக ரன்களை அடிக்க முடியும், 3வது அல்லது 4வதாக கூட பேட்டிங் செய்யலாம். அவருக்கு இருக்கும் திறமையை பார்க்கும்போது நிச்சியமாக ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள உலகக்கோப்பை போட்டியில் நிச்சியமாக இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இஷான் கிஷான் கடந்த ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் அறிமுகம் ஆகியுள்ளார். இனிவரும் களங்களில் அவரது சிறப்பான ஆட்டத்தை எதிர்பார்க்கலாம்.