இந்திய மற்றும் இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டி-20 லீக் போட்டி இன்று இரவு 7 மணியளவில் தொடங்க உள்ளது. இந்த போட்டி லக்னோவில் உள்ள பாரத் ரத்னா மைதானத்தில் நடைபெற உள்ளது. முதல் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர்.
அதன்படி முதலில் களமிறங்கிய இந்தியிற் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 199 ரன்களை அடித்துள்ளனர். அதில் அதிகபட்சமாக இஷான் கிஷான் 89 ரன்களையும், ஷ்ரேயாஸ் ஐயர் 57 ரன்களையம் அடித்துள்ளனர். பின்னர் 200 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இலங்கை.
ஆனால் இறுதி வரை போராடிய இலங்கை அணிக்கு சரியான பார்ட்னெர்ஷிப் அமையவில்லை. அதனால் 20 ஓவர் முடிவில் 137 ரன்களை மட்டுமே அடித்தது இலங்கை அணி. அதனால் 62 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வென்ற இந்திய கிரிக்கெட் அணி 1 – 0 என்ற கணக்கில் இப்பொழுது முன்னிலையில் உள்ளது.
முதல் போட்டியில் 3வதாக களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் ரன்களை அடித்து தொம்சம் செய்தார். இன்னும் சில ஓவர் மட்டும் இருந்திருந்தால் நிச்சியமாக சதம் கூட அடித்திருப்பார். ஷ்ரேயாஸ் ஐயரை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் கூறுகையில் ;
“ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடியான ஆட்டத்தை தொடங்கிய பிறகு, அதனை பார்க்க மிகவும் ஆசையாக உள்ளது. அவர் ஒரே இடத்தில இருந்து விளையாடவில்லை, அவருடைய விருப்பத்திற்கு ஏற்ப பவுண்டரிகளை விளாசி வந்துள்ளார் ஐயர். அதுவும் குறிப்பாக அவர் அடித்த சிக்ஸர் வேற லெவல்”.
அவரை பற்றி வெளியான மோசமான கருத்துக்களுக்கு அவரது பேட் பதில் சொல்லிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும் என்று கூறியுள்ளார் இர்பான் பதான். ஷ்ரேயாஸ் ஐயர் முதல் ஒருநாள் போட்டியை கடந்த 2017ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் விளையாடியுள்ளார்.
முதல் டி-20 போட்டியும் அதே 2017ஆம் ஆண்டு நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாடியுள்ளார். ஆனால் டெஸ்ட் போட்டியில் மட்டும் நீண்ட ஆண்டுகளாக வாய்ப்பு கிடைக்காமல் இருந்தார் ஐயர். ஆனால் கடந்த ஆண்டு இறுதியில் நியூஸிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனார்.
அதில் ஷ்ரேயாஸ் ஐயர் விளையாடிய முதல் டெஸ்ட், முதல் இன்னிங்ஸ்-ல் சதம் அடித்து சாதனை படைத்தார். இனிவரும் காலங்களில் நிச்சியமாக அதிக போட்டிகளில் ஐயர் விளையாட அதிக வாய்ப்பு உள்ளது போல தெரிகிறது. இன்றைய போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வென்று தொடரை கைப்பற்றுமா ??