இந்திய அணியில் இவருக்கு அனைத்தும் சுதந்திரமும் கொடுத்துள்ளோம் ; விராட்கோலி ஓபன் டாக்…! யார் அது ?

England vs India 2021: நேற்று மதியம் எதிரான 4வது டெஸ்ட் போட்டி தொடங்கியது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 61.3 ஓவர் முடிவில் 10 விக்கெட்டை இழந்து 191 ரன்களை அடித்தனர்.

அதில் ரோஹித் சர்மா 11 ரன்கள்,ராகுல் 17 ரன்கள், புஜாரா 4 ரன்கள், விராட்கோலி 50 ரன்கள், ரவீந்திர ஜடேஜா 10 ரன்கள், ரஹானே 14 ரன்கள், ரிஷாப் பண்ட் 9 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தனர். ஆனால் இங்கிலாந்து அணி எதிர்பார்க்காத வகையில் இந்திய அணியின் பவுலர் ஷர்டுல் தாகூர் டி-20 போட்டி போல 36 பந்தில் 57 ரன்களை விளாசினார்.

அதனால் இந்திய அணிக்கு 191 ரன்களை எடுத்துள்ளது. பின்பு முதல் இன்னிங்ஸ் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 17 ஓவர் முடிவில் 53 ரன்களை எடுத்த நிலையில் 3 விக்கெட்டை இழந்துள்ளது. போட்டிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி அளித்த பேட்டியில்,

எங்கள் அணியில் இவருக்கு அனைத்து விதமான சுதந்திரமும் கொடுத்துள்ளோம் என்று கூறியுள்ளார். யார் அது தெரியுமா? இந்திய அணியின் விக்கெட் கீப்பர் (ரிஷாப் பண்ட்) தான்,அதனை பற்றி பேசிய விராட்கோலி நங்கள் ரிஷாப் பண்ட்டுக்கு அனைத்து விதமாக சுதந்திரமும் கொடுத்துள்ளோம்.

அதனால் அவரால் நிச்சயமாக சூழ்நிலைக்கு ஏற்ப போட்டியில் விளையாட முடியும் என்று கூறியுள்ளார் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி. இதுவரை நடந்து முடிந்துள்ள 3 டெஸ்ட் போட்டியில், முதல் டெஸ்ட் போட்டி ட்ராவில் முடிந்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியும், மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணியும் வென்றுள்ளது.

நேற்று தொடங்கிய 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெறுமா ? இல்லையா ? என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும். ஏனென்றால் இந்திய அணி வெறும் 191 ரன்களை மட்டுமே எடுத்துள்ள நிலையில் பவுலிங்கில் தான் தெரியும் வெற்றியா இல்லை தோல்வியா என்று ?