ரோஹித் இல்லை ; இந்திய அணிக்கு சரியான கேப்டன் இவர் தான் ; அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் அட்டகாசம் ;

0

உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் இந்திய மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த போட்டியில் 2 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது இந்திய.

மீதமுள்ள போட்டியில் ஆவது அயர்லாந்து அணி ஆறுதல் வெற்றியை கைப்பற்றுமா ? சமீபத்தில் நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரிலும் இந்திய கிரிக்கெட் அணியின் பங்களிப்பு மிகவும் அருமையாக இருந்தது. இருப்பினும் ஐசிசி போட்டிகளில் மட்டும் சொதப்பி வருகிறது இந்திய.

தோனிக்கு பிறகு ரோஹித் சர்மா மற்றும் விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஐசிசி போட்டிகளில் கோப்பையை வெல்ல முடியாமல் மோசமான நிலையில் உள்ளது இந்திய. இன்னும் சில ஆண்டுகளில் ஓய்வை அறிவிக்க போகும் இருக்கும் நிலையில் அடுத்த கேப்டனாக யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

சூழ்நிலைக்கு ஏற்ப சரியான முடிவுகளை கையில் எடுத்தால் நிச்சியமாக பல மாற்றங்களை எதிர்பார்க்கலாம். அதற்கு உதாரணம் மகேந்திர சிங் தோனி என்பது தான் உண்மை. இந்திய அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்து வருகிறது. அதில் இளம் வீரரான ருதுராஜ் கெய்க்வாட் பெயர் இடம்பெற்றுள்ளது.

ஆமாம், கடந்த இரு ஆண்டுகளாக ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள், உள்ளூர் போட்டிகளில் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்து வருகிறது ருதுராஜ். அதுமட்டுமின்றி, ஏசியன் கேம்ஸ் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி இந்த முறை பங்கேற்க உள்ளது. அதில் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் -ஐ தான் நியமனம் செய்துள்ளது பிசிசிஐ.

அதுமட்டுமின்றி, கடந்த 2021ஆம் ஆண்டில் இந்திய அணியின் அறிமுகம் ஆனார் ருதுராஜ். இருப்பினும் போதுமான அளவிற்கு வாய்ப்பு ருதுராஜ் -க்கு வழங்கப்படவில்லை என்பது தான் உண்மை. அதுமட்டுமின்றி, இளம் வீரர்களை கொண்டு அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாடி வருகிறது இந்திய.

இதில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா தான் கேப்டனாக அணியை வழிநடத்தி வருகிறார். இதில் ருதுராஜ் இரு போட்டிகளில் தொடக்க வீரராக விளையாடி 19*,58 ரன்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் அடுத்த கேப்டனாக இடம்பெற்றால் சிறப்பாக இருக்குமா ? இல்லையா ? உங்கள் கருத்து …!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here