சூர்யா இல்லை ; இவர் மட்டும் இல்லையென்றால் மோசமான தோல்வி தான் கிடைத்திருக்கும் ; அடி பட்டைய கிளப்பிவிட்டார் ; ஹர்டிக் பாண்டிய ஓபன் டாக் ;

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்த வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய அணிக்கு எதிரான தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் இரு டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி-20 போட்டிகளில் விளையாடி வருகின்றனர்.

இதுவரை நடந்து முடிந்த டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கான தொடரில் இந்திய கிரிக்கெட் அணி தொடரை வென்றுள்ள நிலையில் இப்பொழுது டி-20 போட்டியில் வெற்றியை கைப்பற்ற முடியாமல் திணறிக்கொண்டு வருகின்றனர். ஆமாம், இதுவரை நடந்து முடிந்த இரு போட்டிகளிலும் வென்று வெஸ்ட் இண்டீஸ் அணி முன்னிலையில் உள்ளனர்.

டாஸ் :

நேற்று இரவு 8 மணியளவில் குயானவில் உள்ள ப்ரொவிடென்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஹர்டிக் பாண்டிய தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், போவெல் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது.

இந்திய அணியின் பேட்டிங் :

தொடக்க வீரரான இஷான் கிஷான் மற்றும் சுப்மன் கில் எதிர்பார்த்த அளவிற்கு ரன்களை அடிக்கவில்லை. தொடர்ச்சியாக விக்கெட்டை இழந்தனர். அதனால் இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது. இருப்பினும் அறிமுக வீரரான திலக் அதிரடியாக விளையாடி 51 ரன்களை விளாசினார்.

அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 152 ரன்களை மட்டுமே அடித்தது இந்திய அணி. அதில் இஷான் கிஷான் 27, சுப்மன் கில் 7, சூர்யகுமார் யாதவ் 1, திலக் வர்மா 51, சஞ்சு சாம்சன் 7, ஹர்டிக் பாண்டிய 24, அக்சர் பட்டேல் 14, ரவி பிஸோனி 8 ரன்களை அடித்துள்ளனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்டிங் மற்றும் இந்திய அணியை வென்ற விவரம் :

இந்திய கிரிக்கெட் அணியை போலவே வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டம் எதிர்பார்த்த அளவிற்கு அமையவில்லை. இருப்பினும் நிக்கோலஸ் பூரான் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். அதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இந்திய அணியை வெல்ல சுலபமாக மாறியது.

18.5 ஓவர் வரை விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 155 ரன்களை அடித்து 2 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்றது வெஸ்ட் இண்டீஸ்.

ஹர்டிக் பாண்டிய பேட்டி :

போட்டி முடிந்த பிறகு பேசிய இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான ஹர்டிக் பாண்டிய தோல்வியை பெற்று பேசியுள்ளார். அதில் “நான் நேர்மையாக ஒப்புக்கொள்கிறேன், எதிர்ப்பார்த்த அளவிற்கு பேட்டிங் இல்லை, இன்னும் சிறப்பாக விளையாடிருக்க வேண்டும். ஒருவேளை 160 அல்லது 170 ரன்களை அடித்திருந்தால் சிறப்பாக அமைந்திருக்கலாம்.”

“எதிர் அணியில் வீரர்கள் சிறப்பாக பேட்டிங் செய்தனர். அதனால் சுழல் பந்து வீச்சாளர்களை எப்படி பயன்படுத்துவது என்று பல குழப்பம் ஏற்பட்டது. இது போன்ற சூழ்நிலையில் முதலில் இருக்கும் 7 வீரர்கள் சிறப்பாக விளையாட வேண்டும். இதிலும் 4வதாக பேட்டிங் செய்த திலக் வர்மா அதிரடியாக விளையாடி ரன்களை கைப்பற்றினார். உண்மையிலும் அவர் (திலக்) விளையாடுவதை பார்த்தால் இது இரண்டாவது போட்டியாக தெரியவில்லை.”