ஜடேஜா இல்லை ; தோனிக்கு பிறகு இவர் தான் சென்னை அணியின் கேப்டன் இவர் தானாம் ;

0

உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த பொடியாக திகழ்கிறது ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள். வருகின்ற மார்ச் 31ஆம் தேதி அன்று ஐபிஎல் 2023 போட்டிகள் தொடங்க இருக்கிறது. அதனால் அனைத்து வீரர்களும் அவரவர் அணியில் இணைந்து பயிற்சியில் செய்து வருகின்றனர்.

கடந்த 2008ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் ஆனது ஐபிஎல் டி-20 போட்டிகள். 20 ஓவர் போட்டி என்றதால் கிரிக்கெட் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு பெற்றது. அதனால் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இதுவரை 15 சீசன்கள் நடைபெற்று முடிந்த நிலையில் 16 சீசனில் காலடியெடுத்து வைக்க போகிறது ஐபிஎல்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி :

ஐபிஎல் தொடரில் அதிக வெற்றிகளை கைப்பற்றிய அணியாக திகழ்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அதிலும் அதிக முறை ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற அணியாக திகழ்கிறது.

ஆனால் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் பங்களிப்பு மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அதனால் இந்த ஆண்டு ஐபிஎல் 2023 சாம்பியன் படத்தை வெல்லும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனென்றால், சமீபத்தில் நடந்து முடிந்த மினி ஏலத்தில் பென் ஸ்டோக்ஸ் -ஐ கைப்பற்றியுள்ளார். அதனால் ருதுராஜ், பென் ஸ்டோக்ஸ், தீபக் சஹார், தோனி, மொயின் அலி, போன்ற முன்னணி வீரர்கள் அணியில் இருப்பதால் இந்த ஆண்டு சாம்பியன் படத்தை வெல்ல அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

அடுத்த கேப்டன் யார் :

சென்னை அணியில் இருக்கும் முக்கியமான பிரச்சனை அடுத்த கேப்டன் யார் என்பது தான். ஆமாம், இதுவரை 15 ஆண்டுகளாக சென்னை அணியின் கேப்டனாக விளையாடியுள்ளார் மகேந்திர சிங் தோனி.

41வயதான தோனி கடந்த 2020ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். அதனால் இன்னும் ஓராண்டில் சென்னை அணியில் இருந்தும் ஓய்வை அறிவிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதனால் அடுத்த சென்னை அணியின் கேப்டன் என்ற கேள்வி எழுந்துள்ளது. நிச்சியமாக ரவீந்திர ஜடேஜா இருக்க வாய்ப்புகள் கிடையாது. ஏனென்றால், கடந்த ஆண்டு தொடரில் ஜடேஜா தான் கேப்டனாக விளையாட தொடங்கினார். ஆனால் அவரது விளையாடும் சென்னை அணியின் மோசமான தோல்வி காரணமாக மீண்டும் தோனியை கேப்டனாக அறிவித்தனர்.

அதனால் அனுபவம் வாய்ந்த வீரர்களை காட்டிலும் இளம் வீரரான ருதுராஜ் கெய்க்வாட் தான் சென்னை அணியின் கேப்டனாக இடம்பெற அதிக வாய்ப்புகள் இருக்கிறது. அதுமட்டுமின்றி, உள்ளூர் போட்டியான ரஞ்சி கோப்பை, விஜய் ஹசாரே போன்ற போட்டிகளில் மகாராஷ்டிரா அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார் ருதுராஜ்.

இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான கவாஸ்கர் கூறுகையில் : “எனக்கு தெரிந்து தோனிக்கு பிறகு சென்னை அணியின் கேப்டன் ஆகும் தகுதி ருதுராஜ்-க்கு மட்டுமே இருக்கிறது என்று கூறியுள்ளார் கவாஸ்கர்.”

தோனிக்கு பிறகு சென்னை அணியின் கேப்டனாக யார் இருந்தால் சென்னை அணி சிறப்பாக விளையாடும் ? உங்கள் கருத்து ?

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here