இந்திய அணியின் மிடில் ஆர்டர் பலமே இவர் தான் ; தோல்வி பெற்றாலும் இந்திய அணிக்கு நம்பிக்கை எழுந்துள்ளது ;

0

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டி நாட்டிங்காம் மைதானத்தில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு சரியான தொடக்க ஆட்டம் அமையவில்லை.

இருப்பினும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மலன் மற்றும் லிவிங்ஸ்டன் போன்ற வீரர்கள் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். அதனால் இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்த நிலையில் 217 ரன்களை அடிக்க முடிந்தது. அதில் ராய் 27, பட்லர் 18, டேவிட் மலன் 77, லிவிங்ஸ்டன் 42 ரன்களை அதிகபட்சமாக அடித்தனர்.

பின்பு 216 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி. எப்பொழுதும் போலவே இந்திய அணிக்கு முதல் மூன்று விக்கெட் மட்டும் எப்பொழுதும் சரியாக அமையாது. அதேபோல தான் இன்றைய போட்டியிலும் ரோஹித் சர்மா, ரிஷாப் பண்ட் மற்றும் விராட்கோலி போன்ற வீரர்கள் தொடர்ந்து விக்கெட்டை இழந்து வந்தனர்.

இருப்பினும் சூரியகுமார் யாதவின் அதிரடியான ஆட்டத்தால் இந்திய அணிக்கு ரன்கள் குவிந்தது. ஆனால் அதில் எந்த பலனும் இல்லாமல் போனது. ஏனென்றால் இறுதிவரை சிறப்பாக விளையாடியும் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்த இந்திய கிரிக்கெட் அணி 198 ரன்களை மட்டுமே அடித்தது.

அதனால் இங்கிலாந்து அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய. இருப்பினும் மூன்று போட்டிகளில் 2 – 1 என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி முன்னிலையில் இருந்த காரணத்தால் தொடரை கைப்பற்றியுள்ளது இந்திய. 31வயதான சூரியகுமார் யாதவ் கடந்த ஆண்டு தான் இந்திய அணியில் அறிமுகம் ஆனார்.

2021ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகம் ஆகியுள்ளார் சூரியகுமார் யாதவ். இதுவரை 7 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 267 ரன்களையும், 14 டி-20 போட்டியில் 351 ரன்களையும் அடித்துள்ளார் சூரியகுமார் யாதவ். இங்கிலாந்து அணிக்கு எதிரான டி-20 போட்டிகளில் சிறப்பாக விளையாடியுள்ளார்.

அதில் 39, 15, 117 ரன்களை இந்த டி-20 தொடரில் கைப்பற்றியுள்ளார் சூரியகுமார் யாதவ். இந்த ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள உலகக்கோப்பை போட்டியில் சூரியகுமார் இடம்பெற அதிக வாய்ப்புகள் உள்ளது. ஏனென்றால் விராட்கோலி இப்பொழுது சரியாக விளையாடாத நிலையில் சூரியகுமார் யாதவ் நிச்சியமாக இந்திய அணிக்கு பலமாக இருப்பார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here