வீடியோ ; இப்படியெல்லாம் பேசுவீங்களா ? ரிஷாப் பண்ட், ரோஹித் பேசிய Audio வெளியானது ;

0

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி-20 போட்டிகள் நேற்று இரவு முதல் தொடங்கியது. நேற்று நடந்த முதல் போட்டியில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற இந்தியா அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் மற்றும் தொடக்க வீரரான ரோஹித் சர்மா முதல் மூன்று ஓவர்கள் அதிரடியாக விளையாட தொடங்கினார். ஆனால் எதிர்பாராத வகையில் விக்கெட்டை இழந்தார். இந்த முறை மிடில் ஆர்டர் சொதப்பல் ஆட்டத்தை மட்டுமே விளையாடினார்கள்.

ஆமாம், விராட்கோலி, ஹர்டிக் பாண்டிய மற்றும் சூரியகுமார் யாதவ் போன்ற வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக ஆட்டத்தை இழந்தார். இருப்பினும் இந்த போட்டியில் ரவீந்திர ஜடேஜா சிறப்பாக பேட்டிங் செய்து ரன்களை விளாசினார். அதனால் 20வது ஓவர் முடிவில் 170 ரன்களை அடித்தது இந்திய அணி.

அதில் ரோஹித் 31, பண்ட் 26, ரவீந்திர ஜடேஜா 46 ரன்களை அதிகபட்சமாக அடித்துள்ளனர். பின்பு 171 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இங்கிலாந்து அணி. முதல் இரு ஓவரில் முக்கியமான பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர் மற்றும் ஜேசன் ராய் விக்கெட்டை இழந்தது இங்கிலாந்து அணி.

அதனால் பின்னடைவை சந்தித்த இங்கிலாந்து அணியால் மீண்டு வர முடியாமல் போனது. இருப்பினும் மொயின் அலி மற்றும் டேவிட் வில்லே போன்ற வீரர்கள் அதிரடியாக விளையாடினாலும், ஒருவர் பின் ஒருவராக ஆட்டத்தை இழந்தனர். அதனால் இங்கிலாந்து அணியால் நிர்ணயிக்கப்பட்ட ரன்களை அடிக்க முடியாமல் போனது.

அதனால் 17 ஓவர் முடிவில் 10 விக்கெட்டை இழந்த இங்கிலாந்து அணியால் 121 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. அதனால் 49 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது இந்திய. 2 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது இந்திய. இதற்கிடையில் தான் ரிஷாப் பண்ட் மற்றும் ரோஹித் சர்மா பேசியது வெளியானது.

அதில் ரிஷாப் பண்ட் பேட்டிங் செய்த போது ஒரு ரன் அடித்த பிறகு ஓடினார். ஆனால் அப்பொழுது இங்கிலாந்து வீரர்கள் சிலர் பிட்ச்-ன் நடுவில் நுழைந்த காரணத்தால் மறுபக்கத்திற்கு செல்ல தாமதம் ஆனது. இதனை பற்றி ரிஷாப் பண்ட் : “நான் ஓடும் போது யாரவது நடுவில் வந்தால், நான் அவர்களை அடித்து விட்டு சொல்லட்டுமா ? என்று கேட்டார்.

அதற்கு ரோஹித் சர்மா ; அதனை ஏன் நீ பண்ண கூடாது (செய்) என்று கூறினார் ரோஹித் ஷர்மா… இது ஹிந்தில் பேசிய வீடியோ இப்பொழுது இணையத்தை கலக்கி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here