ஒவ்வொரு போட்டியிலும் இவரது ஆட்டம் சிறப்பாக மட்டுமே உள்ளது ; எங்கள் அணியின் வலுவான வீரர் இவர் தான் ; ரோஹித் சர்மா

இங்கிலாந்து மற்றும் இந்திய டி-20 போட்டிகள் :

ஒருவழியாக இந்திய மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று டி-20 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. அதில் இந்திய அணி 2 – 1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த காரணத்தால் தொடரை கைப்பற்றியது.

மூன்றாவது டி-20 போட்டியின் விவரம் :

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்க ஆட்டம் பெரிய அளவில் இல்லையென்றாலும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடினார்கள். அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 215 ரன்களை அடித்தனர்.

அதில் அதிகபட்சமாக டேவிட் மலன் 77, லிவிங்ஸ்டன் 42 ரன்களை அடித்தனர். பின்பு 216 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி. அதில் தொடக்க வீரரான ரிஷாப் பண்ட் சரியாக விளையாடாமல் 1 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

பின்னர் விராட்கோலி சிக்ஸர், பவுண்டரிகளை அடித்த நிலையில் ஆட்டம் இழந்தார். அதனால் இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது. இருப்பினும், தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 198 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. அதில் அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ் 117, ஸ்ரேயாஸ் ஐயர் 28 ரன்களை அடித்தனர்.

அதனால் 17 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய கிரிக்கெட் அணியை வீழ்த்தியது இந்திய அணி.

ரோஹித் சர்மா பேட்டி :

“இந்த போட்டியில் இரண்டாவதாக பேட்டிங் செய்தது மிகவும் சிறப்பாக இருந்தது. உண்மையிலும் இந்த போட்டியில் சண்டை போட்ட விதம் மிகவும் அருமையாக இருந்தது. அதிலும் சூர்யா விளையாட ஆட்டத்தை பார்க்க அற்புதமாக இருந்தது தான் உண்மை. நான் அவரை (சூரியகுமார்) விளையாடுவதை நீண்ட நாட்களாக பார்த்து கொண்டே தான் வருகிறேன்.”

“சூரியகுமார் யாதவ் அணியில் இடம்பெற்றதில் இருந்து இப்பொழுது வரை அவர் எப்பொழுது ஒவ்வொரு போட்டியிலும் வலுவாக மாறிக்கொண்டே வருகிறார். இங்கிலாந்து அணியின் பேட்டிங் தான் எங்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தியது. நாங்கள் எப்பொழுதும் ஒரு அணியாக மட்டுமே யோசிக்க வேண்டும்”

“எங்களுக்கு விருதுகள் கிடைக்கும் என்று நினைத்து கொண்டு விளையாட போவதில்லை. இனிவரும் போட்டிகளில் நாங்கள் இன்னும் சிறப்பாக பேட்டிங் செய்ய வேண்டும். இன்றைய போட்டி நிச்சியமாக பேட்டிங் மற்றும் பவுலிங் போன்ற விஷயங்களுக்கு நல்ல ஒரு பாடமாக உள்ளது. இது போன்ற போட்டிகளில் கற்றுக்கொள்ள உதவியாக இருக்கும் என்று கூறியுள்ளார்.”

இங்கிலாந்து , இந்திய ஒருநாள் போட்டிகள்:

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளனர். 12, 14,16 ஜூலை தேதியில் நடைபெற உள்ளது. அதிலும் இந்திய அணி தொடரை கைப்பற்றுமா ? இல்லையா ?