தோனி சாதனையை முறியடித்துள்ளார் இஷான் கிஷான் ; அப்படி என்ன சாதனை ? முழு விவரம் இதோ ;

0

மகேந்திர சிங் தோனி மற்றும் ரிஷப பண்ட் செய்த சாதனையை முறியடித்துள்ளார் இஷான் கிஷான். அப்படி என்ன சாதனை தெரியுமா ??

இந்திய மற்றும் இலங்கை அணிக்கு எதிரான போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. அதுமட்டுமின்றி, இந்திய அணியின் புதிய மற்றும் இளம் வீரரான இஷான் கிஷான் களமிறங்கி விளையாடி வருகிறார் அதவும் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக. சமீபத்தில் நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இப்பொழுது நடைபெற்று வரும் போட்டிகளில் ரன்களை விளாசி வருகிறார்.

இந்திய அணியின் விக்கெட் கீப்பராக பல சாதனைகளை செய்த வீரர் என்றால் அது மகேந்திர சிங் தோனி மட்டுமே. ஏனென்றால் அவர் தலைமையிலான இந்திய அணி மட்டுமே இதுவரை அனைத்து விதமான ஐசிசி கோப்பைகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

தோனியை தொடர்ந்து ரிஷாப் பண்ட் பல சாதனைகளை செய்து வந்தார். இருப்பினும் இப்பொழுது தோனி மற்றும் ரிஷாப் பண்ட் செய்த சாதனைகளை முறியடித்துள்ளார் இஷான் கிஷான். அப்படி என்ன சாதனை ? இந்தியன் விக்கெட் கீப்பராக டி-20 போட்டியில் அதிக ரன்கள் அடித்த பட்டியல் வெளியானது.

முதலில் தோனி அதிகபட்சமாக 56 ரன்களை அடித்துள்ளார் டி-20 சர்வதேச போட்டியில், பின்னர் கே.எல்.ராகுல் 57 ரன்களை அடித்துள்ளார். ஆனால் இப்பொழுது விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரான ரிஷாப் பண்ட் கடந்த 2019ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் அதிகபட்சமாக 65 ரன்களை அடித்துள்ளார்.

ஆனால் நேற்று முன்தினம் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இஷான் கிஷான் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கி ரன்களை அடித்து தொம்சம் செய்தார். அதில் 56 பந்தில் 89 ரன்களை அடித்துள்ளார், 10 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர் அதில் அடங்கும்.

தனி நபராக அதிக ரன்களை அடித்த காரணத்தால் ரிஷாப் பண்ட் , தோனி செய்த சாதனையை முறியடித்துள்ளார் இஷான் கிஷான். இஷான் கிஷான் கடந்த ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டி-20 போட்டியின் போது இந்திய அணியில் அறிமுகம் ஆனார்.

இஷான் கிஷான் வெறும் டி-20 போட்டிகளில் மட்டுமே விளையாடி வரும் நிலையில் இவரது அதிரடியான ஆட்டம் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் எந்த அளவிற்கு இருக்கும் என்பதை இனிவரும் போட்டிகளில் பார்க்கலாம். கிரிக்கெட் ரசிகர்களே மறக்காமல் உங்கள் கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட்ஸ் பக்கத்தில் பதிவு செய்யுங்கள்….!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here