ரோஹித் ஷர்மாவுக்கு பதிலாக இவர் மட்டும் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கினால் இந்திய அணியை தொடவே முடியாது ; முழு விவரம் இதோ ;

நாளை மதியம் 2 மணியளவில் தொடங்க உள்ளது முதல் ஒருநாள் போட்டி. அதில் கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், தெம்பா பவுமா தலைமையிலான தென்னாபிரிக்கா அணியும் மோத உள்ளனர்.

சமீபத்தில் தான் டெஸ்ட் போட்டிக்கான தொடரில் இந்திய அணி தோல்வியை தான் சந்துத்துள்ளது. அதனால் ஒருநாள் போட்டியில் எப்படியாவது வெல்ல வேண்டும் என்று ரசிகர்கள் இடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளன. ஆமாம், இந்திய அணி வெற்றி பெறுமா ?? இல்லையா ?? என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் யார் யார் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்க போகிறார்கள் என்ற கேள்வி தான் இப்பொழுது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளன. ஆமாம் எப்பொழுதும் இந்திய அணியில் கே.எல்.ராகுல் மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரும் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கி விளையாடி வருகின்றனர்.

ஆனால் இந்த முறை ரோஹித் ஷர்மாவுக்கு தொடை தசை பிடிப்பு ஏற்பட்டுள்ளது, அதனால் அவரால் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் கே.எல்.ராகுல் மற்றும் அவருடன் யார் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்க போகிறார்கள் ?

தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் வெங்கடேஷ் ஐயர் போன்ற மூன்று வீரர்கள் உள்ளனர். அனுபவம் வாய்ந்த வீரரை தேர்வு செய்ய நினைத்தால் ஷிகர் தவான் தான் ஒரே வழி. ஆனால் கடந்த சில ஆண்டு இறுதியில் இருந்து இளம் வீரர்களான ருதுராஜ் மற்றும் வெங்கடேஷ் ஐயர் போன்ற இரு வீரர்கள் அணியில் உள்ளனர்.

அதுமட்டுமின்றி சமீபத்தில் நடந்து முடிந்துள்ள விஜய் ஹசாரே கோப்பைகளில் அதிக சதம் மட்டுமின்றி, தொடக்கத்தில் சிறப்பான ஆட்டத்தை ஏற்படுத்தி வருகிறார் ருதுராஜ் கெய்க்வாட். கே.எல்.ராகுல் என்ன செய்ய போகிறார் என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும். ஆனால் சமீப காலமாக ஷிகர் தவானுக்கு வாய்ப்பே கொடுப்பதில்லை. அதனால் அவருக்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் இடம்பெற்றால் கே.எல்.ராகுலுடன் சிறப்பான தொடக்க ஆட்டத்தை ஏற்படுத்தவும் அதிக வாய்ப்புகள் உள்ளன.

இந்திய அணியின் உத்தேச அணி விவரம் ; கே.எல்.ராகுல், ருதுராஜ் அல்லது ஷிகர் தவான், விராட்கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷாப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர், பும்ரா, ஷர்டுல் தாகூர், ரவிச்சந்திரன் அஸ்வின், புவனேஸ்வர் குமார்.