இவங்க 11 பேர் மட்டும் முதல் ஒருநாள் போட்டியில் விளையாடினாள் இந்திய அணிக்கு தோல்வியே இருக்காது ; உத்தேச அணியின் விவரம் இதோ ;

நாளை மதியம் 2 மணியளவில் கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், தெம்பா பவும தலைமையிலான தென்னாபிரிக்கா அணியும் முதல் ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளனர்.

சமீபத்தில் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் சீரியஸ் தொடரில் 2 – 1 என்ற கணக்கில் தென்னாபிரிக்கா அணி முன்னிலையில் இருந்த காரணத்தால் தொடரை கைப்பற்றியது தென்னாபிரிக்கா அணி. அதனால் ஒருநாள் தொடரில் ஆவது இந்திய அணி வெல்லுமா ?? என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.

கடந்த இரு மாதங்களுக்கு முன்பு தான், இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா பொறுப்பேற்றுள்ளார். ஆனால் அவருக்கு தொடை தசையில் காயம் ஏற்பட்ட காரணத்தால் அவரால் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான தொடர் போட்டிகளில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

அதனால் அவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் இந்திய அணியின் கேப்டனாகவும்,ஜஸ்பிரிட் பும்ரா துணை கேப்டனாகவும் பொறுப்பேற்றுள்ளார்கள். அதனால் நிச்சியமாக இந்த முறை புதிய யுக்திகளுடன் களமிறங்க போகிறது இந்திய அணி. ப்ளேயிங் 11 ல் யார் யார் இடம்பெற போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இதுவரை இந்திய அணியில் விளையாடி வருவது ரோஹித் சர்மா மற்றும் கே.எல்.ரகுல் தான். ஆனால் கே.எல்.ராகுல் -க்கு முன்பு ஷிகர் தவான் தான் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக விளையாடி வருகிறார். ஆனால் சமீப காலமாக ஷிகர் தவான் ஆட்டம் சொல்லும் அளவுக்கு இல்லை. அதனால் இந்திய அணியில் அவருக்கான (ஷிகர் தவான்) வாய்ப்பு குறைந்துவிட்டது.

இந்த முறை ஷிகர் தவானுக்கு வாய்ப்பு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. ஆமாம், அப்படி இல்லை என்றால் சமீபத்தில் கிரிக்கெட் உலகில் கலக்கி கொண்டு வருகின்ற ருதுராஜ் கெய்க்வாட் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இடம்பெற அதிக வாய்ப்புள்ளது.

மிடில் ஆர்டரில் விராட்கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷாப் பண்ட், சூரியகுமார் யாதவ் போன்ற வீரர்கள் அணியில் இடம்பெற்றால் சிறப்பான ப்ளேயிங் 11ல் இடம்பெற அதிக வாய்ப்புள்ளது. அதிலும் விராட்கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகி இப்பொழுது பேட்ஸ்மேனாக மட்டும் களமிறங்க போகிறார்.

அதனால் வலுவான மிடில் ஆர்டர் அமைய அதிக வாய்ப்புள்ளது. ஆல்-ரவுண்டராக வெங்கடேஷ் ஐயர் இடம்பெற அதிக வாய்ப்பு உள்ளது. கடந்த ஐபிஎல் 2021யின் இரண்டாம் பக்கத்தில் இடம்பெற்றுள்ளார் வெங்கடேஷ் ஐயர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சேர்ந்த வெங்கடேஷ் ஐயர் சிறப்பான ஆல் -ரவுண்டராக வளம் வருகிறார்.

ஷர்டுல் தாகூர், ரவிச்சந்திரன் அஸ்வின், புவனேஸ்வர் குமார் மற்றும் ஜஸ்பிரிட் பும்ரா போன்ற நான்குபவுலர்கள் இந்திய அணியில் இடம்பெற்றால் சிறப்பான பவுலிங் மட்டுமின்றி, ப்ளேயிங் 11 வேற லெவெலில் இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் யார் யார் இடம்பெற வேண்டும் ? உங்கள் கருத்துக்களை மறக்காமல் COMMENTS பண்ணுங்க….!