இவங்க தான் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள்…! அதில் எந்த மாற்றமும் இல்லை ; இந்திய அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் ஓபன் டாக் ; முழு விவரம் இதோ ;

கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், தெம்பா பவுமா தலைமையிலான தென்னாபிரிக்கா அணியும் ஒருநாள் தொடரில் விளையாட உள்ளனர். இந்திய அணி வெற்றி பெறுமா ?? என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.

சமீபத்தில் தான் டெஸ்ட் தொடர் போட்டி நடந்து முடிந்துள்ளது. அதில் தென்னாபிரிக்கா அணி தான் தொடரை கைப்பற்றியுள்ளது. ஒருநாள் போட்டி நடைபெற உள்ள நிலையில் யார் யார் இந்திய அணியின் துவக்க வீரராக களமிறங்க போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்திய அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பேட்டி அளித்துள்ளார்.

ஓப்பனிங் பார்ட்னெர்ஷிப் பற்றி பேசிய கே.எல்.ராகுல் ; என்னுடைய பெயர் இந்திய அணியில் இடம்பெற்ற பிறகு தான் எனக்கு நம்பிக்கையே வந்தது. அதுமட்டுமின்றி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்த எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது, அது எனக்கு மிகவும் முக்கியமான போட்டியாக மாறியுள்ளது. அந்த டெஸ்ட் போட்டியில் நாங்க தோல்வியை சந்தித்திருக்கலாம் ஆனால் அதில் நான் கற்றுக்கொண்ட விஷயங்கள் அதிகம்.

ஒரு அணியை வழிநடத்துவது என்பது எனக்கு மட்டுமின்றி அனைவருக்கும் முக்கியமான தருணம் தான். அதுவும் எனக்கு கொடுத்தது மிகப்பெரிய பொறுப்பாக நான் கருதுகிறேன். இந்த முறை காயம் காரணமாக வெளியேற்றியுள்ளார் ரோஹித் சர்மா அதனால் அவர் இல்லாமல் நான் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்க போகிறேன் என்று கூறியுள்ளார் கே.எல்.ராகுல்.

இந்திய கிரிக்கெட் அணியில் யார் யார் இடம்பெற போகிறார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளன. இந்திய கிரிக்கெட் அணியின் உத்தேச விவரம் ; கே.எல்.ராகுல், ஷிகர் தவான் அல்லது ருதுராஜ் கெய்க்வாட், ரிஷாப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், வெங்கடேஷ் ஐயர், ஷர்டுல் தாகூர், புவனேஸ்வர் குமார், பும்ரா போன்ற வீரர்கள் ப்ளேயிங் 11ல் இடம்பெற அதிக வாய்ப்புள்ளது.

விராட்கோலி கேப்டனாக இல்லாமல், முதல் முதலாக கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணிதென்னாபிரிக்கா அணியை வெல்லுமா ? கிரிக்கெட் ரசிகர்களே உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள Comments ல் பதிவு செய்யுங்கள்….!!!