இவரது Comeback-வுக்காக இந்திய அணி காத்திருக்கிறது ; நிச்சியமாக சிறப்பாக விளையாடுவார் ; பாகிஸ்தான் வீரர் லதீப் ;

0

சமீபத்தில் தான் இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி நடந்து முடிந்துள்ளது. அதில் இந்திய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை சம நிலைக்கு கொண்டு வந்தனர். ஆமாம் இரு அணிகளும் தலா 2 போட்டிகளிலும், ஒரு போட்டி ட்ராவில் முடிந்தது.

உலக கிரிக்கெட் அணிகள் அனைவரும் உலகக்கோப்பை டி-20 2022 போட்டியில் விளையாட வீரர்களை தயார் செய்து வருகின்றனர். அதேபோல தன இந்தியா அணியும் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து, அதில் யார் சிறப்பாக விளையாடுகிறார்கள் என்பதை கவனித்து வருகின்றனர்.

ஆனால் கடந்த ஒரு வருடமாகவே இந்திய கிரிக்கெட் அணியில் விராட்கோலி பெரிய அளவில் விளையாடவில்லை என்பது தான் உண்மை. கடந்த 2019ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் தான் இறுதியாக சதம் அடித்தார். அதன்பின்னர் இரு ஆண்டுகளாகவே சதம் அடிக்க முடியாமல் திணறி வருகிறார் விராட்கோலி.

இருப்பினும் பல முன்னாள் வீரர்கள் விராட்கோலி தற்போது இருக்கும் நிலைமையை பற்றி பேசி வருகின்றனர். அதேபோலதான் பாகிஸ்தான் முன்னாள் வீரரான ரஷீத் லதீப் கூறுகையில் : “நிச்சியமாக விராட்கோலி கம்பேக் கொடுப்பார் என்று நான் நம்புகிறேன்.”

“உலக கிரிக்கெட் விளையாட்டிற்கு அவர் தேவை, ஏனென்றால் அவர் விளையாடும் விதம் அப்படி. சமீபத்தில் நடந்து முடிந்த டெஸ்ட் போட்டியில் விராட்கோலி எப்பொழுதும் போலவே சக வீரருக்காக சண்டைக்கு சென்றார். எனக்கு தெரிந்து அதுவே பாசிட்டிவ் ஆன விஷயம் தான்.” என்று ரஷீத் லதீப் கூறியுள்ளார்.

விராட்கோலியை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான விரேந்தர் சேவாக் கூறுகையில் ; “அதனால் நிச்சியமாக அதிரடியாக பேட்டிங் செய்து கம்பேக் கொடுப்பார். எனக்கு தெரிந்து விராட்கோலி-யின் கெட்ட நேரம் முடிந்துவிட்டது. இனிவரும் போட்டிகளில் அவரது விளையாட்டு ஆரம்பிக்கும். இங்கிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் அரைசதம் அடித்துள்ளார்.”

பல முன்னாள் வீரர்கள் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில் பல வீரர்கள் விராட்கோலி நிச்சியமாக கம்பேக் கொடுப்பார் என்று தான் கூறியுள்ளனர். அதனால் இனிவரும் போட்டிகளில் சிறப்பாக விளையாடி ரன்களை அடிப்பாரா ? விராட்கோலி ??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here