இந்திய அணியில் இருக்கும் நம்பிக்கையான ஒரே இளம் வீரர் இவர் தான் என்று ரசிகர்கள் நினைக்கின்றனர் ; முழு விவரம் இதோ ;

இந்திய கிரிக்கெட் அணியில் அவ்வப்போது இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அதில் எத்தனை வீரர்கள் பயன்படுத்தி வருகிறார் என்று கேட்டால் அது கேள்விக்குறியே..! இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான கவாஸ்கர், இவரை தான் நம்பிக்கையான இளம் என்று மக்கள் கருத்துகின்றதாக கூறியுள்ளார்.

கடந்த இரு ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் அணியில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு வருகிறது. அதில் முகமது சிராஜ், சூர்யகுமார் யாதவ், சுமன் கில், ஷர்டுல் தாகூர் போன்ற வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இதனால் யாரை எப்பொழுது தேர்வு செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.

இருப்பினும் அவ்வப்போது தொடர் போட்டிகளில் மாற்றி மாற்றி வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. பல வீரர்களுக்கு வாய்ப்புகள் கொடுத்தால் யார் பயன்படுத்துவது என்று தெரியவில்லை. இதனை பற்றி பேசிய முன்னாள் வீரரான இந்திய அணியின் வீரர் கவாஸ்கர் அளித்த பேட்டியில் ;

நியூஸிலாந்து-ல் நடைபெற்ற அண்டர் 19 உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு அதிக வீரர்கள் இந்திய அணியின் டெஸ்ட் போட்டிக்கான அணியில் விளையாடி வருகின்றனர். ஆனால், அதில் அனைத்து இளம் வீரர்கள் மத்தியில் சுமன் கில் தான் நம்பிக்கையான வீரர் என்று கூறியுள்ளனர்.

சுமன் கில் கடந்த 2019 ஆம் ஆண்டு நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கினார். அதில் முதல் இரு போட்டிகளில் 9, 7 போன்ற ரன்களை அடித்துள்ளனர். பின்னர் நடைபெற்ற போட்டியில் பிருத்வி ஷாவ் -க்கு பதிலாக சுமன் கில் இடம்பெற்றார். அதில் ஆட்டம் இழக்காமல் 35 மற்றும் 45 ரன்களை அடித்துள்ளார் சுமன் கில்.

அதுமட்டுமின்றி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இடம்பெற்றார் சுமன் கில், அதில் முதல் இன்னிங்ஸ்-ல் 28 மற்றும் இரண்டாவது இன்னிங்ஸ்-ல் 8 ரன்களை மட்டுமே அடித்துள்ளார் சுமன் கில். அதனை தொடர்ந்து இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

இப்பொழுது இந்திய கிரிக்கெட் டெஸ்ட் அணி மிகவும் மோசமான நிலையில் உள்ளது. சரியான வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்குமா ? இந்திய கிரிக்கெட் அணி..!