இனிமேல் இவரால் இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடவே முடியாது ; ரசிகர்கள் மிகழ்ச்சிய ?

0

சமீபத்தில் தான் நியூஸிலாந்து மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு எதிரான போட்டிகள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில் டி-20 போட்டிக்கான தொடரில் இந்திய அணியும், ஒருநாள் போட்டிக்கான தொடரில் நியூஸிலாந்து அணியும் வென்றுள்ளனர்.

அதனை அடுத்து இப்பொழுது இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் மற்றும் இரு டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளது. ஆனால் இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் வென்ற பங்களாதேஷ் அணி 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளனர்.

இந்திய அணியில் வாய்ப்பை இழந்து தவிக்கும் விக்கெட் கீப்பர் :

கடந்த 2017ஆம் ஆண்டு இந்தியா கிரிக்கெட் அணியில் அறிமுகம் ஆனவர் ரிஷாப் பண்ட். ஒருநாள், டி-20 மற்றும் டெஸ்ட் போன்ற அனைத்து விதமான போட்டிகளிலும் இடம்பெற்று வருகிறார் ரிஷாப் பண்ட். ஆனால் கடந்த ஐபிஎல் 2022 தொடர் முடிந்த பிறகு தினேஷ் கார்த்திக் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்ற காரணத்தால் ரிஷாப் பண்ட் -க்கு வாய்ப்பு பெரிய அளவில் கிடைக்கவில்லை.

அதுமட்டுமின்றி, உலகக்கோப்பை 2022 போட்டியில் வாய்ப்பு கிடைத்தும் 3,6 ரன்களை மட்டுமே அடித்திருந்தார் ரிஷாப் பண்ட். அதுமட்டுமின்றி, சமீபத்தில் நடந்து முடிந்த நியூஸிலாந்து அணிக்கு எதிரான தொடரில் ரிஷாப் பண்ட் -ன் பங்களிப்பு மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது தான் உண்மை. ஆமாம் நியூஸிலாந்து அணிக்கு எதிரான டி-20 போட்டியில் : 6, 11 ரன்களையும், ஒருநாள் போட்டியில் : 15, 10 ரன்களை மட்டுமே அடித்துள்ளனர்.

அதனால் இனிவரும் போட்டிகளில் அவருக்கு பதிலாக மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டுமென்று கிரிக்கெட் ரசிகர்கள் பலர் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வந்துள்ளனர். அதேபோல தான் பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது. 6வதாக பேட்டிங் செய்யும் ரிஷாப் பண்ட் -க்கு பதிலாக கே.எல்.ராகுல் களமிறங்கிய சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தார்.

மிடில் ஆர்டரில் ரிஷாப் பண்ட் -ஐ காட்டிலும் கே.எல்.ராகுலின் ஆட்டம் மிகவும் அருமையாக இருந்தது தான் உண்மை. அதனால் இனிவரும் போட்டிகளிலும் கே.எல்.ராகுல் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது..! விக்கெட் கீப்பர் / பேட்ஸ்மேன் -ஆக யார் விளையாடினால் சிறப்பாக இருக்கும் ரிஷாப் பண்ட் ஆ? கே.எல்.ராகுல் ஆ ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here