நான் கஷ்டப்பட்டு கொண்டு இருந்த நேரத்தில் தோனி சொன்னதை எப்பொழுது நான் மறக்கவேமாட்டேன் ; முன்னாள் வீரர் பேட்டி ;

இந்திய கிரிக்கெட் அணியில் இப்பொழுது அதிகப்படியான புதிய வீரர்களுக்கு வாய்ப்புகளை கொடுத்து வருகிறது பிசிசிஐ. அதற்கு முக்கியமான காரணம் ஐபிஎல் போட்டி தான். ஏனென்றால், ஐபிஎல் போட்டிகளில் திறமையாக விளையாடும் அனைத்து வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கொடுத்து வருகின்றனர்.

ஆனால் கடந்த சில மாதங்களுக்கு இடையே இந்திய அணியின் கேப்டன் பற்றிய சர்ச்சை மிகப்பெரிய அளவில் எழுந்தது தான் உண்மை. மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தான் அனைத்து விதமான ஐசிசி கோப்பைகளையும் வென்றுள்ளது.

தோனிக்கு பின்னர் கேப்டனாக பொறுப்பேற்ற விராட்கோலி சரியாக வழிநடத்தி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி இறுதி போட்டியில் இருந்து விலகியது. தோனி இந்திய அணியின் கேப்டனாக இருந்த நேரத்தில் பல இந்திய அணியின் ஜாம்பவான்கள் விளையாடியுள்ளனர்.

அதில் ஒருவர் தான் சேவாக். சமீபத்தில் அளித்த பேட்டியில் சேவாக் என்ன என்ன கஷ்டங்களை எதிர்கொண்டார் என்பதை பற்றி கூறியுள்ளார். அதில் ” கங்குலி-க்கு பிறகு தோனி கேப்டனாக பொறுப்பேற்றார், அப்பொழுது இருந்த கமிட்டி உறுப்பினர் ஸ்ரீகாந்த் என்னிடம், உனக்கு என்னதான் வேண்டும் என்று கேட்டார்.”

“என்னை நம்பி , அனைத்து விதமான போட்டிகளிலும் விளையாட வைத்தால் என்னை அணியில் எடுங்கள் அல்லது வேண்டாம் என்று கூறினேன் (சேவாக்) . பின்னர் ஸ்ரீகாந்த் அப்பொழுது கேப்டனாக இருந்த தோனியிடம் இப்படி சொன்னதிற்கு விரேந்தர் சேவாக் அணியில் விளையாடட்டும் என்று தோனி கூறினார்.”

“அதன்பின்னர், தான் எனக்கு அணியில் அதிக வாய்ப்புகளை கொடுத்தனர். ஆனால் இதனை நான் யாரிடமும் சொல்லவில்லை, எனக்கு என்ன செய்ய வேண்டுமென்பது நன்கு தெரியும். நிச்சியமாக அனைத்து வீரர்களும் கடினமான காலத்தை கடந்து தான் வந்திருப்பார்கள்.”

“அதிலும் ஒரு சிலர், அதனை பாசிட்டிவ் ஆக எடுத்துக்கொண்டு முன்னேறிக்கொண்டு செல்வார்கள். ஆனால் சிலர் அதனை தவறாக புரிந்து கொண்டு அதனையே யோசித்துக்கொண்டு விளையாடுவார்கள். ஒவ்வொரு வீரருக்கும் தனித்தனி விதம் உண்டு. விராட்கோலி எப்பொழுது ஆக்குரோசமாக இருப்பது அவரது வழக்கம்.”

“சமீபத்தில் டூப்ளஸிஸ் சொன்னது போல, விராட்கோலி போட்டியின் போது உணர்ச்சி வசப்படும் போது நிச்சியமாக அது மற்ற வீரருக்கு ஊக்குவிக்கும் வகையில் தான் இருக்கும் என்று கூறியுள்ளார் வீரேந்திர சேவாக் கூறியுள்ளார்.”