இதோட இந்திய அணியில் இவருக்கு வாய்ப்பு கொடுக்க கூடாது ; ரசிகர்கள் உறுதி ;

ஐபிஎல் போட்டிகள் கடந்த மார்ச் 31ஆம் தேதி முதல் ஐபிஎல் 2023 போட்டிகள் தொடங்கியுள்ளது. மே மாதம் இறுதி வரை நடைபெற உள்ளதால் விறுவிறுப்பான தொடருக்கு பஞ்சம் இருக்காது.

போட்டி 16 : சுருக்கம் :

அருண் ஜெட்லீ மைதானத்தில் நடைபெற்று முடிந்துள்ள போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற மும்பை பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய டெல்லி கேபிட்டல்ஸ் அணி இறுதி ஓவர் வரை போராடிய டெல்லி அணி, 172 ரன்களை அடித்தனர்.

பின்பு 173 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தீரில் வெற்றி காத்திருந்தது. இறுதி ஓவர் வரை போராடிய மும்பை இந்தியன்ஸ் அணி 173 ரன்களை அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியுள்ளது மும்பை. அதுமட்டுமின்றி இந்த ஆண்டு ஐபிஎல் 2023 தொடரில் முதல் வெற்றியை கைப்பற்றியுள்ளது மும்பை.

மோசமான நிலையில் விளையாடி வரும் இந்திய அணியின் அதிரடி வீரர் :

கடந்த 2021ஆம் இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுகம் ஆனார் சூரியகுமார் யாதவ். அதில் இருந்து சிறப்பாக விளையாடி வரும் சூரியகுமார் யாதவ் இந்திய அணியின் 360 டிகிரி மன்னன் என்று ரசிகர்கள் அன்போடு அழைக்கின்றனர். டி-20 போட்டியில் அதிரடியாக விளையாடி வரும் சூரியகுமார் யாதவ், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சொதப்பி வருகிறார்.

சமீபத்தில் நடந்து முடிந்த ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் பெரிய அளவில் ரன்களை அடிக்காமல் விக்கெட்டை இழந்தார். சரி ஐபிஎல் (டி-20) போட்டியில் ஆவது ரன்களை அடிப்பார் என்று ரசிகர்கள் ஆவலோடு நினைத்து கொண்டு வந்தனர். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது.

சூரியகுமார் இறுதியாக விளையாடிய 6 போட்டிகளில் – 0, 0, 0, 15, 1, 0 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இந்த ஆண்டில் ஆசிய கோப்பை, ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போன்ற விஷயங்கள் நடைபெற உள்ளதால் சூர்யகுமார் இடம்பெறுவாரா இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சூரியகுமார் யாதவிற்கு பதிலாக யார் அணியில் இடம்பெற்றால் சிறப்பாக இருக்கும் ? அல்லது சூரியகுமார் யாதவ் கம்பேக் கொடுப்பாரா ? இல்லையா ? உங்கள் கருத்துக்களை மறக்காமல் COMMENTS பண்ணுங்க..!