வீடியோ : ஐயோ ..! சத்தியமாக முடியலடா சாமி ; கைக்கு வந்த பந்தை தவறவிட்டதால் கடுப்பான ரோஹித் ;

0

நேற்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லீ மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி முதலில் களமிறங்கிய டெல்லி அணிக்கு தொடக்க ஆட்டம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. இருப்பினும் ஆல் – ரவுண்டரான அக்சர் பட்டேல் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். அதனால் 19.4 ஓவர் வரை விளையாடிய டெல்லி அணி அனைத்து விக்கெட்டையும் இழந்த நிலையில் 172 ரன்களை அடித்தனர்.

அதில் டேவிட் வார்னர் 51, பிருத்வி ஷாவ் 15, மனிஷ் பாண்டே 26, அக்சர் பட்டேல் 54 ரன்களை அதிகபட்சமாக அடித்துள்ளனர். பின்பு 173 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது மும்பை இந்தியன்ஸ் அணி. தொடக்கத்தில் சிறப்பாக விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தொடக்க ஆட்டம் சிறப்பாக அமைந்தது.

இருந்தாலும் சூர்யகுமார் யாதவின் பங்களிப்பு இல்லாத காரணத்தால் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது மும்பை இந்தியன்ஸ் அணி. பின்பு இறுதி ஓவர் வரை போராடிய மும்பை இந்தியன்ஸ் அணி 173 ரன்களை அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியை வென்று முதல் வெற்றியை கைப்பற்றியுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.

கடுப்பான ரோஹித் சர்மா :

அக்சர் பட்டேல் அடித்த இரு சிக்ஸரை தடுக்க முடியாமல் திணறினார் சூரியகுமார் யாதவ். அதுவும் 16.4 ஓவரில் பெஹ்ரேன் வீசிய பந்தை எதிர்கொண்டார் அக்சர் பட்டேல். அப்பொழுது அதிரடியாக விளையாடிய அக்சர் சிக்ஸர் அடிக்க முயற்சி செய்தார். அப்பொழுது சிக்ஸர் லைனில் நின்று கொண்டு இருந்தார் சூரியகுமார்.

அந்த பந்தை சுலபமாக கைப்பற்றிருக்க முடியும். ஆனால் சூரியகுமார் யாதவ் சரியாக பிடிக்காத காரணத்தால் அந்த பந்து கை பட்டு சிக்ஸர் சென்றது. இதனை பார்த்த ரோஹித் சர்மா என்ன சொல்வதென்று தெரியாமல் திணறினார். அதன்வீடியோ இப்பொழுது இணையத்தை கலக்கி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here