நான் இப்படி விளையாடியும் பயனில்லை ; தோல்விக்கு இதுதான் காரணம் ; ரொம்ப கஷ்டமாக இருக்கிறது ; தோனி ஓபன் டாக்

போட்டி 17: நேற்று இரவு 7:30 மணியளவில் தொடங்கிய போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற தோனி பவுலிங் செய்ய முடிவு செய்தார்.

அதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தொடக்க ஆட்டம் எதிர்பார்த்த அளவிற்கு அமையவில்லை. இருப்பினும் அஸ்வின், ஹெட்மயேர், ஜோஸ் பட்லர், படிக்கல் போன்ற வீரர்கள் குறைவான ரன்களை அடித்தனர். அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்த நிலையில் 175 ரன்களை அடித்துள்ளனர்.

அதில் ஜெய்ஸ்வால் 10, ஜோஸ் பட்லர் 52, படிக்கல் 38, அஸ்வின் 30, ஹெட்மேயேர் 30* ரன்களை அடித்துள்ளார். பின்பு 176 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட் 8 ரன்களை அடித்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.

அதனால் சென்னை அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது. இருப்பினும் இறுதி ஓவர் வரை போராடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்த நிலையில் 172 ரன்களை அடித்தனர். அதில் டேவன் கான்வே 50, ரஹானே 31, ரவீந்திர ஜடேஜா 25, தோனி 32 ரன்களை அடித்துள்ளனர்.

போட்டி முடிந்த பிறகு பேசிய சென்னை அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனி கூறுகையில் : “எனக்கு தெரிந்து மிடில் ஓவரில் சரியாக பேட்டிங் செய்யாதது தான் தோல்விக்கு முக்கியமான காரணம். பந்து சுழலவில்லை என்றாலும் ராஜஸ்தான் அணியிடம் அனுபவம் வாய்ந்த சுழல் பந்து வீச்சாளர்கள் இருக்கின்றனர்.”

“அவ்வளவு கடினமாக ஒன்றும் இல்லை, பேட்ஸ்மேன் அடித்து விளையாடிருக்க வேண்டும். பவுலர்கள் சரியான இடத்தில் பவுலிங் செய்தால் அவர்களுக்கு நல்ல விஷயம் தான். நான் பொறுமையாக தான் விளையாடினேன். அதாவது உங்களுக்கு எது வேலை செய்யும் என்பதை மனதில் வைத்து தான் விளையாட வேண்டும். எனக்கு ஸ்ட்ராயிட் ஆக அடிப்பது சரியாக இருக்கும் என்று நினைத்து விளையாடினேன்.”

“நான் உண்மையிலும் சென்னை அணியின் பவுலிங் பற்றி எதுவும் சொல்லமாட்டேன். ஏனென்றால் சிறப்பாக பவுலிங் செய்தனர். இது என்னுடைய 200வது போட்டி என்று சத்தியமாக தெரியாது. இதெல்லாம் எனக்கு கவலை கிடையாது. நான் எப்படி விளையாடுகிறேன் அது அணிக்கு எப்படி பலனாக இருக்கிறது என்பது தான் முக்கியம் என்று கூறியுள்ளார் மகேந்திர சிங் தோனி.