தோனி வகுத்துள்ள புது வியூகம்…. இனிமேல் இவருக்கு வாய்ப்பு இருக்காது ; முதல் போட்டியில் தோல்விக்கு முக்கிய காரணம் ;

0

16ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர், கடந்த மார்ச் 31- ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று மாலை 06.00 மணிக்கு குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் கோலாகலமாகத் தொடங்கியது.

தொடக்க விழாவில், கலை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், வாண வேடிக்கை ஆகியவை இடம்பெற்றது. அதேபோல், டிரோன்கள் மூலம் ஐ.பி.எல். கோப்பை, அணிகளின் லோகோக்கள் ஆகியவை தத்ரூபமாகக் காட்சிப்படுத்தப்பட்டனர்.

தொடக்க விழாவில், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ் ஆகிய 10 அணிகளின் கேப்டன்கள் கலந்துக் கொண்டனர்.

அதைத் தொடர்ந்து, அன்று இரவு 07.30 மணிக்கு நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த முதல் லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ரன்களை எடுத்திருந்தது.

179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 19.2 ஓவர்கள் முடிவில், 182 ரன்களை எடுத்தது. இதனால் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. முதல் போட்டியிலேயே தோல்வி காரணமாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

சென்னை அணியில் இந்த வீரர்களை களத்தில் இறக்கி இருந்தால், தோல்வியைத் தவிர்த்திருக்கலாம் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதில், குறிப்பாக ‘இம்பேக்ட் பிளேயர்’ நடப்பு ஐ.பி.எல். தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டது. ‘இம்பேக்ட் பிளேயர்’ நடைமுறையின் முதல் வீரராக களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த துஷார் தேஷ்பாண்டே 20 பந்துகளை மட்டுமே வீசி 51 ரன்களை விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தினார்.

துஷார் தேஷ்பாண்டேவை களத்தில் இறக்காமல் இருந்திருந்தால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றிருக்க அதிக வாய்ப்பு இருந்திருக்கிறது.

இந்த நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம் மைதானத்தில் நாளை (ஏப்ரல் 03) இரவு 07.30 மணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது. மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இந்த மைதானத்தில் போட்டி நடைபெறவிருப்பதால், ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த போட்டியில், துஷார் தேஷ்பாண்டேவை கேப்டன் தோனி களமிறக்க வாய்ப்பு குறைவு என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகின்றனர் இதனால் அவருக்கு பதில் சிமர்ஜீத் சிங் -ஐ களமிறக்க அந்த அணி முடிவு செய்துள்ளது. அத்துடன், சென்னை போட்டியில், லெவன் அணியை முற்றிலும் மாற்றி அமைக்க தோனி முடிவு செய்துள்ளதாக தகவல் கூறுகின்றன. அத்துடன், லக்னோ உடனான போட்டியில், தோனி புதிய வியூகத்தை வகுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here