எனக்கு பிடித்த ஒரே சுழல் பந்து வீச்சாளர் இவர் தான் ; வருத்தமாக பேசிய விராட்கோலி ; முழு விவரம் இதோ ;

0

சமீபத்தில் அளித்த பேட்டியில் விராட்கோலி தனக்கு பிடித்த முக்கியமான சுழல் பந்து வீச்சாளரை பற்றி வருத்தமாக பேசியுள்ளார்.

ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரான ஷேன் வார்னே நேற்று தாய்லாந்தில் இருக்கும் அவரது இல்லத்தில் சில நாட்களாக வாழ்ந்து வந்தார். ஆனால் நேற்று அவர் சுயநினைவு இல்லாமல் வீட்டில் இருந்த காரணத்தால் உடனடியாக மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அவர் நெஞ்சு வலி காரணமாக உயிர் இழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இந்த தகவல் கிரிக்கெட் ரசிகர்கள் இடையே மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது தான் உண்மை. சுழல் பந்து வீச்சால் அனைவரின் மனதை வென்றுள்ளார் என்பது தான் உண்மை. ஷேன் வார்னே பற்றிய கருத்தை இப்பொழுது அனைத்து வீரர்களும் அவரவர் கருத்தை பகிர்ந்து வருகின்றனர். அதில் விராட்கோலி சமீபத்தில் அளித்த பேட்டியில் ; நேற்று இரவு தான் எங்களுக்கு செய்தி கிடைத்தது ஷேன் வார்னே உயிர் இறந்துவிட்டார் என்று.

52 வயதில் உயிர் இழந்தது என்னால் நம்ப முடியவில்லை. ஷேன் வார்னே ஒரு நேர்மையான வீரர் என்பதில் சந்தேகமில்லை. அவரை போன்ற ஒரு வீரர் கிரிக்கெட் போட்டியில் இருந்தது எனக்கு மிகவும் சந்தோசமாக உள்ளது. என்னை பொறுத்தவரை அவர் ( ஷேன் வார்னே) தான் மிகப்பெரிய சுழல் பந்து வீச்சாளர். வாழ்க்கையில் எப்போ என்ன நடக்கும் என்று யாராலும் கணிக்க முடியாது.

அவரை நிச்சியமாக நாம் அனைவரும் மிஸ் செய்ய போகிறோம். ஷேன் வார்னே குடுபத்திற்கு என்னுடைய துணை என்றும் இருக்கும். எனக்கு புரிகிறது அவர் குடும்பம் , குழந்தைகள் அனைவரும் தைரியமாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார் விராட்கோலி. இதுவரை ஷேன் வார்னே அவரது சுழல் பந்து வீச்சால் டெஸ்ட் போட்டியில் மட்டுமே 708 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here