ஐபிஎல் 2022யில் இவர் தான் அதிக விலைக்கு ஏலத்தில் போகும் வீரர் ; முன்னாள் இந்திய வீரர் உறுதி ; ஆனால் சிஎஸ்கே அணியில் கிடையாதாம் ;

ஐபிஎல் 2022 போட்டிக்கான ஏலம் வருகின்ற பிப்ரவரி மாதத்தில் நடைபெற உள்ளதாக பிசிசிஐ சமீபத்தில் தான் தகவலை வெளியிட்டுள்ளது.

அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கத்திருக்கின்றனர். ஆமாம்… இந்த ஆண்டு ஐபிஎல் டி20 லீக் போட்டியில் லக்னோ மற்றும் அகமதாபாத் போன்ற இரு அணிகளை அறிமுகம் செய்துள்ளது பிசிசிஐ. அதனால் இந்த முறை மெகா ஏலம் நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமின்றி, இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் யார் அதிக விலைக்கு ஏலம் போக போகிறார் என்ற கேள்வி ஐபிஎல் ரசிகர்கள் இடையே எழுந்துள்ளன. அதற்கு ஒரே பதில் டேவிட் வார்னர் தான். ஆமாம்…. கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் சன்ரைஸ்சர்ஸ் ஹைதெராபாத் அணியில் விளையாடி வந்தார். ஆனால், அவரது கேப்டன் பதவி சரியில்லை என்று அவரை கேப்டன் பதவியில் இருந்து வெளியேற்றி பின்னர் அணியில் இருந்தும் வெளியேற்றியது சன்ரைஸ்சர்ஸ் அணி.

பின்னர் டி20 உலகக்கோப்பை 2022யில் அதிரடியாக விளையாடி அதிக ரன்களையும் அடித்து தொம்சம் செய்துள்ளார். அதுமட்டுமின்றி இந்த முறை ஐபிஎல் போட்டிகளில் அறிமுகமாகியுள்ள லக்னோ மற்றும் அகமதாபாத் போன்ற இரு அணிகளிலும் டேவிட் வார்னரை அணியில் கைப்பற்றவில்லை. இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா அளித்த பேட்டியில் ;

எனக்கு தெரிந்து ஒரே வீரர் அது டேவிட் வார்னர் தான். அவர் தான் நிச்சியமாக ஐபிஎல் போட்டிக்கான ஏலத்தில் அதிக விலைக்கு விற்கப்படுவார். அவருக்கு தான் டிமாண்ட் அதிகம். ஆனால் எனக்கு தெரிந்து புதிய அணியான லக்னோ அவரை கைப்பற்ற எந்த ஒரு வாய்ப்பும் இல்லாதது போல தான் தெரிகிறது.

ஹைதெராபாத் அணியில் இவரை வெளியேற்றிய நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிச்சியமாக வார்னரை பற்றி கொஞ்சம் கூட யோசிக்கவே யோசிக்காது. அதேபோல மும்பை இந்தியன்ஸ் அணியும் தான் வார்னரை கைப்பற்றுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்பது போல தெரிகிறது. அதற்காக அவர் தான் அதிக விலைக்கு வாங்கப்படுவார் என்று சொல்லவில்லை.

ஆனால் வார்னர் நிச்சியமாக லக்னோ, டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகளில் ஏலம் எடுக்க முன்வருவார்கள் என்பதில் சந்தேகமில்லை. இந்த முறை ஒரு கேப்டனாக இல்லாமல், நிச்சியமாக ஓப்பனிங் பேட்ஸ்மேனாக தான் டேவிட் வார்னர் அணியில் தேர்வு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறியுள்ளார் ஆகாஷ் சோப்ரா….!!!