தோனி ஓய்வை அறிவிக்க இன்னும் சில ஆண்டுகள் இருக்கிறது ; ரசிகர்கள் உற்சாகம் ;

0

ஐபிஎல் : கடந்த 2008ஆம் ஆண்டு அறிமுகம் ஆனது ஐபிஎல் டி-20 போட்டிகள். ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு பெற்றதால் ஆண்டுதோறும் தவறாமல் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இதுவரை 15 சீசன்கள் நடைபெற்று முடிந்த நிலையில் 16வது சீசன் வருகின்ற மார்ச் 31ஆம் தேதி முதல் தொடங்க இருக்கிறது. அதனால் அனைத்து விதமான கிரிக்கெட் வீரர்களும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி :

ஐபிஎல் டி-20 போட்டிகளில் அதிக போட்டிகளில் வென்ற அணியாகவும், அதிக முறை ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற அணியாக திகழ்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. ஐபிஎல் அறிமுகம் ஆன காலத்தில் இருந்து கேப்டனாக விளையாடி வருவது மகேந்திர சிங் தோனி தான்.

சுமார் 15 ஆண்டுகள் ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக விளையாடிய ஒரே வீரர் மகேந்திர சிங் தோனி தான். கடந்த 2020ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து வெளியேறியுள்ளார் தோனி. ஆனால், ஐபிஎல் தொடரில் மட்டும் தொடர்ந்து விளையாடி வருகிறார்.

41 வயதான தோனி எந்த நேரத்திலும் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வை அறிவிக்க வாய்ப்புகள் இருக்கிறது. அதுமட்டுமின்றி, இரு ஆண்டுகளுக்கு பிறகு அவரவர் ஹாம் மைதானத்தில் போட்டிகள் நடைபெற இருக்கிறது.

அதனால் இறுதியாக சென்னை அணியில் தோனி ஓய்வை அறிவிப்பார் என்று ரசிகர்கள் வேதனையோடு இருக்கின்றனர். இருப்பினும் சமீபத்தில் சுரேஷ் ரெய்னா வெளியிட்ட தகவல் ரசிகர்கள் இடையே சந்தோசத்தை ஏற்படுத்தியுள்ளது.

அப்படி என்ன சொன்னார் சுரேஷ் ரெய்னா ?

“மகேந்திர சிங் தோனி இன்னும் பிட்னஸ் ஆக இருக்கிறார். அதனால் ஐபிஎல் 2023 போட்டிகளில் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் நிச்சியமாக அடுத்த ஆண்டு ஐபிஎல் 2024 தொடரிலும் தோனி விளையாடுவார் என்று கூறியுள்ளார்.”

“எனக்கு தெரிந்து சிஎஸ்கே எப்பொழுதுமே வலுவாக தான் இருக்கிறது. ஏனென்றால் சென்னை அணியில் ருதுராஜ் கெய்க்வாட், கான்வே, பென் ஸ்டோக்ஸ் போன்ற வீரர்கள் இருக்கின்றனர். அதனால் சென்னை அணிக்கு பலம் தான்.”

“சமீபத்தில் தான் தோனியுடன் பேசினேன். அப்பொழுது அவர் கடுமையாக சென்னை அணியில் இணைந்து பயிற்சி மேற்கொண்டு வருகிறார் என்று கூறியுள்ளார் சுரேஷ் ரெய்னா….! “

ஒருவேளை சென்னை அணியில் இருந்து மகேந்திர சிங் தோனி விலகினால் அடுத்த கேப்டனாக யார் இடம்பெறுவார் ? உங்கள் கருத்து என்ன ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here