இந்திய கிரிக்கெட் :
கடந்த பல ஆண்டுகளாக இளம் வீரர்களுக்கான வாய்ப்பு என்பது அதிகரித்து கொண்டே தான் வருகிறது. அதிலும் ஐபிஎல் போட்டிகளில் எந்த வீரர் சிறப்பாக விளையாடினாலும் நிச்சியமாக இந்திய கிரிக்கெட் அணியில் வாய்ப்பு உறுதி தான். இப்பொழுது ஐபிஎல் 2022 போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இன்னும் சில நாட்களில் ஐபிஎல் 2022 போட்டிகள் முற்றிலுமாக முடிவுக்கு வந்துவிடும். போட்டி முடிந்த பிறகு ஜூன் 9ஆம் தேதி முதல் இந்திய மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு எதிரான டி-20 போட்டிகள் நடைபெற உள்ளது. அதற்கான இந்திய அணியை சமீபத்தில் தான் வெளியிட்டது பிசிசிஐ.
அதில் முக்கியமான வீரர்கான பும்ரா, விராட்கோலி, ஷமி, ரோஹித் சர்மா மற்றும் சில வீரர்களுக்கு ஓய்வை அறிவித்துள்ளது பிசிசிஐ. அதில் பல வீரர்கள் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் தான். அதுமட்டுமின்றி, இந்திய அணியில் புதிதாக இடம்பெற்றுள்ளார் வேகப்பந்து வீச்சாளர் உம்ரன் மலிக்.
இவர் கடந்த ஆண்டு இறுதியில் நடராஜனுக்கு பதிலாக சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியில் இடம்பெற்றார். பின்னர் அதிவேகமாக பவுலிங் செய்த காரணத்தால் சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணி இவரை தக்கவைத்து. அதுமட்டுமின்றி, இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய உம்ரன் மலிக் 22 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்.
அதுமட்டுமின்றி இவரது சிறப்பான பந்து வீச்சால் இவர் (உம்ரன் மலிக் )நிச்சியமாக இந்திய அணியில் இடம்பெற வேண்டும் என்று பலர் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். அதேபோல தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இடம்பெற்றுள்ளார் உம்ரன் மலிக்.
இதனை பற்றி பேசிய இந்தியன் அணியின் முன்னாள் கங்குலி மற்றும் பிசிசிஐ-யின் தலைவர் கங்குலி கூறுகையில் ; “அவரது (உம்ரன் மலிக்) எதிர்காலம் அவரது கையில் தான் உள்ளது. அவர் மட்டும் பிட்னெஸ் சரியாக இருந்தால், பவுலிங் சிறப்பாக இருக்கும்…!”
“அதற்கு மட்டுமின்றி, இந்திய கிரிக்கெட் அணியில் நிச்சியமாக அதிக வருடம் இருக்கும் விளையாடுவார். இவரையடுத்து மும்பை அணியில் திலக் வர்மா, சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியில் ராகுல் திரிபதி மற்றும் குஜராத் அணிக்கு ராகுல் திவேதிய போன்ற வீரர்கள் சிறப்பாக விளையாடி வந்தனர்.”
“இந்த முறை பல இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். அதில் மலிக் , மொஹ்சின் கான், அர்ஷதீப் சிங், ஆவேஷ் கான் போன்ற திறமையான வீரர்கள் உள்ளனர் என்று கூறியுள்ளார் கங்குலி. உம்ரன் மலிக் இந்திய அணியில் இடம்பெற பெற்றால் சிறப்பாக இருக்குமா ?
உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பண்ணுங்க..!