இந்திய கிரிக்கெட் அணியின் சூப்பர் ஸ்டார் இவர் தான் ; எனக்கும் அவருக்கும் போட்டி ஒன்றும் இல்லை ; வெங்கடேஷ் ஐயர் ஓபன் டாக் ;

0

ஐபிஎல் 2022:

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துகொண்டு இருந்த ஐபிஎல் 2022 போட்டிகள் கடந்த மார்ச் 26ஆம் தேதி முதல் தொடங்கியது. பின்னர் இரு தினங்களுக்கு முன்பு தான் லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. அதில் குஜராத், லக்னோ, ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் போன்ற அணிகள் ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

இதில் குஜராத் டைட்டன்ஸ் அணியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார் இந்திய அணியின் ஆல் – ரவுண்டர் ஹார்டிக் பாண்டிய. ஆமாம், கடந்த ஒரு வருடமாக சரியாக விளையாடாத ஹார்டிக் பாண்டிய சில ஓய்வுக்கு பிறகு சிறப்பான கம்பேக் கொடுத்துள்ளார் என்பது தான் உண்மை.

இதுவரை 13 போட்டிகளில் விளையாடிய ஹார்டிக் பாண்டிய 413 ரன்களை அடித்துள்ளார். அதிலும் அதிகபட்சமாக 87 ரன்களை அடித்துள்ளார். அதுமட்டுமின்றி 13 போட்டிகளில் 4 விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளார் ஹார்டிக். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜூன் 9ஆம் தேதி அன்று தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் விளையாட போகிறார் ஹார்டிக் பாண்டிய.

இதனை பற்றி பேசிய இந்திய அணியின் வீரரான வெங்கடேஷ் ஐயர் கூறுகையில் :” உண்மையை சொல்ல வேண்டுமென்றால் ஹார்டிக் பாண்டிய ஒரு சூப்பர் ஸ்டார். இது எனக்கு மிகவும் முக்கியமான தருணம், அவரிடம் (ஹர்டிக் பாண்டிய)-விடம் இருந்து பல விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும்.”

“இந்திய அணிக்காக பல போட்டிகளில் சிறப்பாக விளையாடி வெற்றிகளை பெற்று கொடுத்துள்ளார். நிச்சியமாக அதனை இனிவரும் போட்டிகளிலும் செய்வார். எனக்கு அவருக்கும் எந்த விதமான போட்டியும் இல்லை. எப்பொழுதும் எனக்கு மேல் அவர் தான். அவருடன் சேர்ந்து விளையாட நான் ஆர்வமாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார் வெங்கடேஷ் ஐயர்.”

மேலும் ஐபிஎல் 2022 போட்டிகளை பற்றி பேசிய வெங்கடேஷ் ஐயர் : “நான் என்னுடைய திறமையை முழுமையாக தான் வெளிப்படுத்தினேன். என்னுடைய செயலில் நான் சரியாக தான் இருக்கிறேன். இதில் வருத்தப்பட ஒன்றும் இல்லை. ஆனால் சில விஷயங்கள் நாங்கள் நினைத்தபடி நடக்கவில்லை.”

“இருப்பினும் நிச்சயமாக அடுத்த ஆண்டுகளில் சிறப்பாக விளையாடுவோம், அதுவும் சரியான அணியுடன் என்று கூறியுள்ளார் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் வெங்கடேஷ் ஐயர்.”

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here