இந்த காரணத்தால் தான் ரவீந்திர ஜடேஜாவுக்கு பதிலாக கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார் தோனி ; முழு விவரம் இதோ ;

0

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி :

ஐபிஎல் 2022 போட்டிகளில் சென்னை அணி மிகவும் மோசமான நிலையில் விளையாடி வருகிறது தான் உண்மை. ஏனென்றால், இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 2 போட்டியில் மட்டுமே வெற்றியை கைப்பற்றிய நிலையில் புள்ளிபட்டியலில் 9வது இடத்தில் உள்ளது சென்னை அணி.

சிஎஸ்கே அணியின் கேப்டன் :

கடந்த 2008ஆம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார் மகேந்திர சிங் தோனி. இதுவரை தோனி தலைமையிலான சென்னை அணி மொத்தம் 4 முறை சாம்பியன் படத்தை வென்றுள்ளது. இருப்பினும் தோனி கடந்த 2020ஆம் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார்.

அதனால் இன்னும் சில ஆண்டுகளில் நிச்சியமாக ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகிவிடுவார். அதனால் அவர் இருக்கும்போதே ரவீந்திர ஜடேஜாவை கேப்டனாக அறிவித்தது சென்னை அணி.

புதிய கேப்டன் :

நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொடுத்த தகவலின் படி இனிவரும் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மீண்டும் மகேந்திர சிங் தோனி பொறுப்பேற்று வழிநடத்தப்போவதாக சென்னை அணி உறுதி செய்தது. அதற்கு என்ன காரணமாக இருக்கும் என்று ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

சென்னை அணி விளக்கம் :

“இதுவரை விளையாடிய போட்டிகளில் சென்னை அணியை ஜடேஜா சிறப்பாக தான் வழிநடத்தி வந்தார். அதுவும் நான்கு முறை சாம்பியன் படத்தை கைப்பற்றிய ஒரு அணிக்கு இந்த நிலைமையா ? கடந்த மூன்று தினங்களாக இதனை பற்றி பேச்சுவார்த்தைகள் நடந்தது.”

“ஜடேஜாவுக்கு பதிலாக மீண்டும் தோனி கேப்டனாக வந்ததற்கு முக்கியமான காரணம் அணியின் தோல்வியால் இல்லை, ஜடேஜாவின் மோசமான ஆட்டத்தால் தான். ஏனென்றால் உலக கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த ஆல் – ரவுண்டர் என்ற படத்தை கைப்பற்றிய ரவீந்திர ஜடேஜா இப்பொழுது சரியாக விளையாடுவது இல்லை.”

“கேப்டன் பதவி அவருக்கு கொடுக்கப்பட்டதில் இருந்து அவருக்கு வேலை சுமை அதிகரித்து விட்டதாக தெரிகிறது. கடந்த சில ஆண்டுகளாக சென்னை அணியில் சிறப்பான ஆல் – ரவுண்டராக விளையாடி வந்துள்ளார் ஜடேஜா. இதுவரை ஜடேஜா விளையாடிய போட்டிகளில் 5 விக்கெட்டை கைப்பற்றிய நிலையில் 112 ரன்களை மட்டுமே அடித்துள்ளார்.”

“அதுமட்டுமின்றி, இப்பொழுதெல்லாம் பீல்டிங் செய்யும்போது கேட்ச்-ஐ கூட பிடிக்காமல் தவித்து வருகிறார் ஜடேஜா. இதனை பற்றி பேசிய சென்னை அணியின் முதலாளி ஸ்ரீனிவாசன் கூறுகையில் ; முதலில் தோனிக்கு பதிலாக ஜடேஜா கேப்டன் என்று சொன்னார்கள் அதற்கு சரி என்று சொன்னேன்.”

“ஆனால் இப்பொழுது சில தவறுகளால் சென்னை அணி தோல்வியை பெற்று வருகிறது. அதனை நிச்சியமாக தோனி சரி செய்து அணியை முன்னேற்றி கொண்டு செல்வார் என்று கூறியுள்ளார்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here