நேற்று இரவு நடந்த 27வது போட்டியில் டூப்ளஸிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், ரிஷாப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பவுலிங்கை தெரிவு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூர் அணிக்கு தொடக்க ஆட்டம் சரியாக அமையவில்லை. அதனால் பார்ட்னெர்ஷிப் இல்லாமல் தவித்து வந்தது பெங்களூர் அணி. ஆனால் மேக்ஸ்வெல் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரின் அதிரடியான ஆட்டத்தால் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்த நிலையில் 189 ரன்களை அடித்துள்ளது பெங்களூர் அணி.
அதில் டூப்ளஸிஸ் 8, அனுஜ் ராவத் 0, விராட்கோலி 12, மேக்ஸ்வெல் 55, பிரபுதேசாய் 6, அகமத் 32, தினேஷ் கார்த்திக் 66 ரன்களை அடித்துள்ளனர். பின்பு 190 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது டெல்லி கேபிட்டல்ஸ் அணி. தொடக்க வீரரான வார்னரை தவிர்த்து மற்ற வீரர்கள் எதிர்பார்த்த அளவிற்கு பேட்டிங் செய்யவில்லை என்பது தான் உண்மை.
அதுமட்டுமின்றி, அனைவரும் சரியாக பார்ட்னெர்ஷிப் அமைக்காமல் ஒருவர் பின் ஒருவராக ஆட்டம் இழந்து கொண்டு வந்தனர். அதனால் இறுதி ஓவர் வரை போராடிய டெல்லி கேபிட்டல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 173 ரன்களை மட்டுமே அடித்துள்ளது.
அதனால் 16 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி. இதனால் புள்ளிபட்டியலில் பெங்களூர் அணி 3வது இடத்திலையும், டெல்லி அணி 8வது இடத்திலையும் உள்ளது. போட்டி முடிந்த பிறகு பேசிய டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷாப் பண்ட் ;
“எனக்கு தெரிந்து இன்றைய போட்டியில் வார்னர் சிறப்பாக விளையாடினார். அவர் பேட்டிங் செய்து கொண்டு இருந்த போது எங்கள் அணிக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகரித்து கொண்டே இருந்தனர். அதுமட்டுமின்றி, மார்ஷ் இன்றைய போட்டியில் தான் அறிமுகம் ஆனார்.”
“நான் அவரை தப்பு சொல்லவே மாட்டேன் (ரிஷாப் பண்ட் அடித்த பந்து எதிர்பாராத விதமாக ஹசரங்க கையில் பட்டு ஸ்டம்ப்-ல் பட்டுவிட்டது. அப்பொழுது தான் மார்ஷ் ரன் அவுட் ஆனார். மிடில் ஓவரில் நாங்கள் சரியாக ரன்களை அடிக்க தவறிவிட்டோம். எனக்கு தெரிந்து நாங்கள் பவுலிங் பிளான் படி தான் செய்தோம்.”
“ஆனால் எதிர் அணியின் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் சூழ்நிலையில் புரிந்து கொண்டு விளையாடியது மிகவும் பாராட்ட வேண்டிய விஷயம் தான். அதில் அனைவரும் பவுண்டரிகளை அடிக்க முயற்சி செய்த நேரத்தில் தான் நான் குல்தீப் யாதவை பவுலிங் செய்ய வைத்தேன்.”
“ஒரு அணியாக நாங்கள் செய்த தவறை மீண்டும் செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். செய்த தவறை மீண்டும் செய்யாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் ரிஷாப் பண்ட்.” டெல்லி கேபிட்டல்ஸ் அணி கடந்த 2020 ஆம் இறுதி போட்டியிலும், 2021 ஆம் ஆண்டு ப்ளே – ஆஃப் சுற்றிலும் தகுதி பெற்றுள்ளது டெல்லி அணி.
ஆனால் இந்த முறை புள்ளிபட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. இந்த முறை ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா ? டெல்லி அணி ?