நீ யாராக வேண்டுமானாலும் இருந்துக்கோ..! 14 போட்டிகளில் ஒருமுறை கூட 50 ரன்களை அடிக்கவில்லையா ; முன்னாள் வீரர் ஆவேசம் ;

ஜூலை 1ஆம் தேதி முதல் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளது. அதற்காக இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதிலும் நேற்று பயிற்சி ஆட்டம் தொடங்கியுள்ளது. அதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தனர்.

ஆனால் பயிற்சி ஆட்டம் இந்திய அணிக்கு மிகவும் மோசமான தொடக்கமாக தான அமைந்துள்ளது. ஆமாம், ஏனென்றால் முதலில் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஒருநாள் போட்டியில் விளையாடுவது போல ரன்களை அடிக்க அடிக்க ஒருவர் பின் ஒருவராக ஆட்டத்தை இழந்து வந்தனர்.

ஆமாம், தொடக்க வீரரான ரோஹித் சர்மா (கேப்டன்) எதிர்பார்த்த அளவிற்கு விளையாடவில்லை. அதுமட்டுமின்றி ஸ்ரீகர் பாரத் ஐ தவிர்த்து மற்ற வீரர்கள் யாரும் பெரிய அளவில் விளையாடவில்லை என்பது தான உண்மை. ஆமாம் 60.2 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்துள்ளது இந்திய கிரிக்கெட் அணி.

அதிலும் ரோஹித் சர்மா 25, சுமன் கில் 21, விராட்கோலி 33, ஸ்ரீகர் பாரத் 70, ஷர்டுல் தாகூர் 6, உமேஷ் யாதவ் 23 ரன்களை அடித்துள்ளனர். இதில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கும் ரோஹித் சர்மா, விராட்கோலி, சுமன் கில் போன்ற வீரர்கள் யாரும் பெரிய அளவில் ரன்களை அடிக்காமல் ஆட்டத்தை இழந்தனர்.

இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான கபில் தேவ் சில கருத்துக்களை பதிவு செய்துள்ளார். அதில் ” இவர் (ரோஹித் சர்மா) என்ன இப்படி விளையாடுகிறார் ? ரோஹித் சர்மா அருமையான வீரர் தான் அதில் மாற்றம் கிடையாது. அதற்கு சமீபத்தில் விளையாடிய 14 போட்டிகளில் ஒரு அரைசதமும் இல்லையென்றால் நிச்சியமாக கேள்விகள் எழும்.”

“டான் பிரட்மன், விராட்கோலி, சச்சின் டெண்டுல்கர், கவாஸ்கர், அல்லது யாராக இருந்தாலும் கேள்விகள் ஏழும். இதற்கு ரோஹித் சர்மா தான் பதில் சொல்ல வேண்டும். ஒருவேளை அவர் கிரிக்கெட் போட்டியை ரசித்து விளையாடுவதை நிறுத்திவிட்டாரா ? ரோஹித் மற்றும் விராட்கோலி போன்ற வீரர்கள் கிரிக்கெட் போட்டிகளை ரசித்து விளையாட வேண்டும்.”

“ரன்களை அடிக்க வேண்டும், ரசிகர்களிடையே நல்ல பெயர் இருக்கிறது என்று விளையாட கூடாது. கடந்த 14 போட்டிகளில் ஒரு முறை கூட 50 அடிக்க முடியில்லையா ? இப்படி செய்தால் வாய்ப்புகள் வழங்குவது கடினமான நிலைக்கு தள்ளப்படும். ஒருவேளை போட்டியில் வெளியேற்றினால் மறுபடி எப்படி வாய்ப்பு கிடைக்கும் ?”

“விராட்கோலி ஒரு ஹீரோ. முன்பு சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், கவாஸ்கர் போன்ற வீரர்களை பேசிக்கொண்டு இருந்த நேரத்தில் தீடிரென்று தோன்றினார் விராட்கோலி. அதிரடியாக விளையாடி பல ரன்களை அடித்தார். ஆனால் இப்பொழுது ஒப்பிட்டு பேசுவதற்கு கூட ரன்களை அடிக்காமல் விளையாடி வருகிறார். அதனால் இனிவரும் போட்டிகளில் ஆவது தெளிவாக விளையாட வேண்டும்” என்று கூறியுள்ளார்கபில் தேவ்.