ஐபிஎல் போட்டிகளில் நான் அடிக்கடி இவருடன் சண்டை போடுவது வழக்கம் தான் ; தோனி பேட்டி

ஐபிஎல் 2022 போட்டிகள் வருகின்ற மார்ச் 26ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. அதுமட்டுமின்றி இந்த ஆண்டு ஐபிஎல் 2022யில் புதிதாக லக்னோ மற்றும் குஜராத் போன்ற இரு அணிகளை அறிமுகம் செய்துள்ளது பிசிசிஐ. அதனால் நிச்சியமாக விறுவிறுப்பான போட்டிக்கு பஞ்சம் இருக்காது.

ஐபிஎல் போட்டி என்று சொன்னால் போதும் சென்னை அணியை பற்றிய எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. புதிய இரு அணிகள் அறிமுகமாகியுள்ளதால் இந்த முறை மிகப்பெரிய அளவில் ஏலம் நடத்த போவதாக பிசிசிஐ கூறியது.

அதனால் மற்ற 8 அணிகளும் அதிகபட்சமாக தலா 4 வீரர்களை தக்கவைத்து கொள்ள முடியும் என்று பிசிசிஐ கூறியது. அதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ருதுராஜ் கெய்க்வாட், மொயின் அலி, ரவீந்திர ஜடேஜா மற்றும் மகேந்திர சிங் தோனி போன்ற நான்கு வீரர்கள் அணியில் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

இருப்பினும் ப்ராவோ, டூப்ளஸிஸ், ராயுடு, ஷர்டுல் தாகூர் போன்ற வீரர்களை எப்படியாவது அணியில் கைப்பற்ற அனைத்து முயற்சிகளையும் கையில் எடுத்து சென்னை அணி. அதில் தீபக் சஹார், ப்ராவோ, அம்பதி ராயுடு போன்ற வீரர்கள் அணியில் கைப்பற்றியது சென்னை அணி.

இதில் ப்ராவோ அணியில் கைப்பற்றியது தான் ஆச்சரியமாக உள்ளது. ஆமாம் ஏனென்றால் ப்ராவோ சமீபத்தில் தான் சர்வதேச போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். 38 வயதான ப்ராவோ இதற்கு மேல் விளையாடுவாரா இல்லையா என்ற பல கேள்விகள் எழுந்து வருகின்றனர்.

சென்னை அணி கைப்பற்றியதற்கு இரு காரணங்கள் அவர் இன்னும் சிறப்பாக தான் விளையாடி வருகிறார். அதுமட்டுமின்றி, தோனி மற்றும் ப்ராவோ ஆகிய இருவரும் சிறந்த நண்பர்கள். அதனால் போட்டியில் என்ன எப்படி நடக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய சுலபமாக இருக்கும் .

இவர்களுடைய நட்பை பற்றி பேசிய மகேந்திர சிங் தோனி ; ப்ராவோ இன்னும் சிறப்பாக விளையாடி வருகிறார். அதுமட்டுமின்றி பற்றி யோசனையும் வேண்டாம். நான் அவரை எப்பொழுது சகோதரர் என்று தான் பார்க்கிறேன். எப்பொழுது ஐபிஎல் போட்டிகள் வந்தாலும் எங்கள் இருவருக்கும் இடையே நிச்சியமாக சண்டை இருக்கும்.

கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியில், ப்ராவோ மெதுவாக பவுலிங் செய்வார் என்று அனைவருக்கும் தெரியும். அதனால் விதவிதமாக பந்துகளை வீச சொன்னேன். ஏனென்றால் ஒரே மாதிரி பவுலிங் செய்தால் பேட்ஸ்மேனுக்கு நன்கு தெரிந்துவிடும் பந்து இப்படி தான் வருகிறது என்று. விதவிதமாக வீசினால் நிச்சியமாக பேட்ஸ்மேனால் கண்டுபிடிக்க முடியாது.

நான் சொல்வதை கேட்காமல் ஏதாவது தவறு செய்து கொண்டே தான் இருப்பார், அதனால் எங்கள் இருவருக்கும் இடையே சண்டை நடந்து கொண்டே தான் இருக்கும் என்று கூறியுள்ளார் தல மகேந்திர சிங் தோனி.