இவர் இப்படியெல்லாம் அடிக்க மாட்டாரு என்று தான் நினைத்தோம் ; ஆனால் பட்டைய கிளப்பிவிட்டார் ; ஷனாக ஓபன் டாக் ;

0

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்த இலங்கை அணிக்கு எதிரான டி-20 போட்டிக்கான தொடர் நடைபெற்று முடிந்துள்ளது. கடந்த ஜனவரி 3ஆம் தேதி முதல் தொடங்கிய டி-20 போட்டிக்கான தொடரில் ஹர்டிக் பாண்டிய தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், ஷனாக தலைமையிலான இலங்கை அணியும் விளையாடியது.

அதில் இந்திய கிரிக்கெட் அணி 2 – 1 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளனர். மூன்றாவது டி-20 போட்டியில் டாஸ் வென்ற இந்தியா அணியின் கேப்டன் ஹர்டிக் பாண்டிய பேட்டிங் செய்து டார்கெட் செட் செய்ய முடிவு செய்தார்.

அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணிக்கு வழக்கம் போல தொடக்க ஆட்டம் சிறப்பாக அமையவில்லை. ஆமாம், தொடக்க வீரரான இஷான் கிஷான் 1 ரன்களில் ஆட்டம் இழந்தார். பின்பு சுப்மன் கில் மற்றும் ராகுல் திரிபதி ஆகிய இருவரும் சிறப்பாக பார்ட்னெர்ஷிப் செய்து 70க்கு மேற்பட்ட ரன்களை விளாசினார்.

அதனால் இந்திய அணிக்கு ஆறுதலாக இருந்தது. பின்பு டி-20 போட்டியின் கதாநாயகன் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 229 ரன்களை அடித்தது இந்திய. அதில் இஷான் கிஷான் 1, சுப்மன் கில் 46, ராகுல் திரிபதி 35, சூர்யகுமார் யாதவ் 112*, ஹர்டிக் பாண்டிய 4, அக்சர் பட்டேல் 21* ரன்களை அதிகபட்சமாக அடித்துள்ளனர்.

பின்பு 230 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கி இலங்கை அணிக்கு தொடக்கத்தில் இருந்து பார்ட்னெர்ஷிப் சரியாக அமையாத காரணத்தால் தொடர்ந்து விக்கெட்டை இழந்து கொண்டே வந்தனர். 16.4 ஓவர் முடிவில் 10 விக்கெட்டையும் இழந்த இலங்கை அணி வெறும் 137 ரன்களை மட்டுமே அடித்தனர். அதனால் 91 ரன்களில் இலங்கை அணியை வென்றது இந்திய கிரிக்கெட் அணி.

போட்டி முடிந்த பிறகு பேசிய இலங்கை அணியின் கேப்டனான ஷனாக கூறுகையில் : “நாங்க இங்கு வருவதற்கு முன்பு நன் போர்மில் இல்லை. ஆனால் இந்த டி-20 போட்டிக்கான தொடரில் நான் போர்மில் இருக்க தொடங்கிவிட்டேன். அதனால் என்னுடைய விளையாட்டு எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுக்கிறது. அதுமட்டுமின்றி, என்னுடைய அணியில் இருக்கும் வீரர்கள் விளையாடிய விதம் பாசிட்டிவ் ஆக இருக்கிறது.”

“தொடரில் விளையாடி கொண்டு இருக்கும் நேரத்தில் என்னுடைய விரலில் அடிபட்டு விட்டது. அதனால் தான் என்னால் பவுலிங் செய்ய முடியவில்லை. ஆனால் ஒருநாள் போட்டிகளில் பவுலிங் செய்ய அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறேன். தொடரை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துக்கள். முக்கியமாக சூர்யகுமார் யாதவிக்கு தான். அதிரடியாக விளையாடி ரன்களை எல்லாப்பக்கமும் விளாசினார் என்று கூறியுள்ளார் ஷனாக.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here